தில்லாலங்கடி போலிசிடம் சிக்கி தவிக்கும் திருச்சி மக்கள் !

0

தில்லாலங்கடி போலிசிடம் சிக்கி தவிக்கும் அப்பாவி திருச்சி மக்கள் !

 

பொதுமக்களுக்கு பிரச்சனை என்றால் போலீஸ் வரும் ஆனால் போலிசே பிரச்சனை என்றால் யார் வருவார்கள் என்பது போன்று . தில்லாலங்கடி போலிசிடம் சிக்கி தவிக்கிறார்கள் அப்பாவி திருச்சி மக்கள் !

https://businesstrichy.com/the-royal-mahal/

திருச்சியில் ஆயுதப்படை முதல் நிலை காவலராக பணியாற்றி தற்போது நவல்பட்டு அண்ணாநகரில் உள்ள பயிற்சி பள்ளியில் பணியாற்றி வரும் வடிவேல். இவர் மனைவி சித்ரா இவரும் காவலர் இவர்கள் கடந்த 15 வருடமாக சீட்டு தொழிலில் கோலாட்சி செய்து வருவதாகவும் திருச்சி மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் காவலர்களும் மாநகர காவல் துறையில் பணியாற்றும் முக்கிய காவல் அதிகாரிகளும் இவரிடம் சீட்டு  வியாபாரம் நடத்தி வருகிறார்கள்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

கடந்த ஒரு வருடமாக காவல் அதிகாரி வடிவேல் சீட்டு பணத்தை  வாங்கிக்கொண்டு அதற்குரிய நபர்களுக்கு தகுந்த பதில் அளிக்காமல் தப்பித்துக்கொண்டு இருக்கிறார்.  சில காவலர்கள் நேரில் சென்று பணம் கேட்கும் போது உடல்நிலை சரியில்லை, வங்கியில் லோனுக்கு முயற்சி செய்து வருவதாகவும் வேறு வேறு காரணம் சொல்லி தவிர்த்து இருக்கிறார்.

 

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நம்முடைய அங்குசம் செய்தியாளரிடம் பேசும் போது…

 

நான் சலூன் கடை வைத்திருக்கிறேன், எனது கடைக்கு அடிக்கடி வருவதால் வடிவேல் அறிமுகமானார். அதன் பின்னர்  சீட்டு நடத்தி வருவதையும் அதில்  பல முக்கிய அதிகாரிகளும் உள்ளனர். என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னையும், எனது நண்பர்களையும் அந்த குழுவில் இணைத்துக்கொண்டார். அதன்படி 1/03/2018 தொடங்கி 8 மாதத்தில் 55,200  ரூபாயும் கட்டி முடித்துள்ளேன்..

 

இது போல எனது நண்பர் பாலு கண்ணன் 1,24,075 ரூபாயும் மற்றொரு நண்பர் சுரேஷ் 24,200 ரூபாயும் அளித்துள்ளனர். மொத்த தொகையாக 3பேரும் சேர்ந்து 2,03, 475 ரூபாய் சீட்டு பணம் செலுத்தினோம்.

.

ஆனா திரும்ப பணத்தை தரவே இல்லை. கட்டிய பணத்தை திரும்பக் கேட்டால் வடிவேல் பணத்தை கொடுக்கும் எண்ணத்தில் பதில் தராமல் நாட்கள் கடத்திக்கொண்டே வந்தார்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த 4 மாதத்திற்கு முன்பு மாவட்ட ஆயுதப்படை கமாண்டரிடம் புகாரினை அளித்திருந்தோம் வாங்கி படித்த பார்த்த  அந்த கமாண்டோ நடவடிக்கை எடுப்பதாக சொன்னார், ஆனாலே அவரே காவலர் வடிவேலுவிடம் பல காவலர்களும் சீட்டு போட்டிருக்காங்க என்று தெரியும் ஆனா.. பாப்போம் என்று சொல்லி எங்களை அனுப்பி வைத்தார்

இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக மாநகர காவல் ஆணையர்  மின்னஞ்சல் முகவரிக்கு ஆறு மாதத்திற்கு முன் அனுப்பி புகார் தெரிவித்தோம். அதிலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த நிலையில் காவலர் வடிவேல் இடமாற்றம் செய்யப்பட்டு நவல்பட்டு அண்ணா நகர் காவலர் பயிற்சி மையத்திற்கு சென்று விட்டார் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டாலும் எந்தவித பதிலும் தெரிவிப்பதில்லை, எங்களை போன்றே சீட்டு பணம் கட்டியுள்ள காவலர்களில் பலர் எங்களிடம் காவலர் வடிவேல் மீது புகார் கொடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இதனை வெளியில் நாங்கள் ஏமாந்து விட்டதாக சொல்வது என்பது காவல் அதிகாரிகள் எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அவசர காலத்தில் உதவியாக இருக்கும என்று நினைத்து கட்டிய தொகை தற்போது எங்கள் உயிரை வாங்குகிறது என்று அழ ஆரம்பித்தார்.

காவலர் வடிவேலு குறித்து விசாரிக்க ஆரம்பித்த போது.. காவலர் வடிவேலினால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நபர் பற்றிய தகவல் நமக்கு கிடைத்து.

அந்நபரிடம் காவலர் வடிவேல் குறித்து விசாரித்த போது…கண்ணீர் விட்டு அழுகாத குறையாக நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

 

திருச்சி பஜார் பகுதியில் செல்போன் கடை வைத்திருப்பவர் வினோத்.. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவருடைய கடைக்கு காவலர் வடிவேல் நண்பர்களுடன் வருவதும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பந்தா காட்டியிருக்கிறார்.

 

தான் ஏலச்சீட்டு நடத்தி வருவதாகவும் அதில் என்னை கட்டாயப்படுத்தி  5 லட்சம் சீட்டில் சேர்த்துக்கொண்டார். நானும் தொடர்ந்து பணம் கட்டி வந்தேன். சீட்டின் ஏலத்திற்காக பலமுறை ஏலம் எடமலைப்பட்டி புதூர் செல்லும் வழியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் அவரது வீட்டிற்கு சென்றேன்.

 

ஒவ்வொரு முறையும் எனக்கு ஏமாற்றம் தான் இந்நிலையில் என்னுடைய பொருளாதார சூழ்நிலையால் 20 மாதம் கட்டவேண்டிய சீட்டில் 17 மாதம் கட்டி முடித்த நிலையில் எனக்கு கிட்டி செயல் இழந்து போனதால் சிகிச்சை பணம் இல்லாமல் வடிவேலுவிடம் கட்டிய பணத்தை கேட்டேன்…

எட்டு மாத காலம் மருத்துவ சிகிச்சை செலவிற்கு கூட பணம் இல்லாமல் என் குடும்பம் என்னை வைத்து கொண்டு பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். தற்போது இரண்டு கிட்னியும் செயல் இழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் இந்த நிலையிலும் ஈவு இரக்கம் இல்லாமல் பணத்தை தராமல் ஏமாற்றுகிறார் காவலர் வடிவேல் .

எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இப்போது தான் தெரிகிறது என்னை போன்று பலபேர் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்… மாநகர காவல்துறை  ஆணையர் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்றார்.

 

இதுதொடர்பாக காவலர் வடிவேலுவிடம் கருத்து கேட்ட போது… சலூன் குமாரிடம் பேசிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன் என்று தொடர்பை துண்டித்தார்.

 

மக்களுக்கு பாதுகாப்பையும்,  நம்பிக்கையை கொடுக்கும் காவல்துறையை சேர்ந்த  காவலர் வடிவேல் தம்பதிகள்…. தன்னுடைய அரசாங்க வேலையோடு சேர்த்து  சீட்டு நடத்துவதும், மக்கள் கட்டிய பணத்தை ஏமாற்றுவதும் தன்னுடன் பணியாற்றும் சக காவலர்களின் பணத்தை வாங்கி கொண்டு  டிமிக்கி கொடுத்து மோசடி செய்வர்கள் மீது  திருச்சி மாநகர ஆணையர் நடவடிக்கை எடுத்து முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்பதே திருச்சி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது…

-ஜித்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.