ஆகஸ்ட். 08 முதல் ஜி-5 ஓடிடியில் ‘மாமன்’
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, சுவாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிப்பில் சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீசாகி வசூலில் வரவேற்பைப் பெற்ற படம் ‘மாமன்’. இப்போது அந்த ‘மாமன்’ ஜி-5 ஓடிடி பிளாட்பார்மிலும் ஆகஸ்ட். 08-ஆம் தேதி முதல் வருகிறார்.
“திரையரங்குகளில் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்ற மாமன் இப்போது அனைத்து வீடுகளிலும் வரவேற்பைப் பெறும் நம்பிக்கையிலும் மகிழ்ச்சியிலும் எங்களின் பிளாட்பார்மில் ஸ்ட்ரீமிங் செய்யப் போகிறோம். உலகம் முழுக்க பார்வையாளர்களைச் சென்றடைந்து அவர்களிடையே குடும்பப்பிணைப்புகள் குறித்த உரையாடல்களை ஆரம்பிக்கும் என நம்புகிறோம். அனைவரின் மனதிற்கும் மேலும் நெருக்கமாவான் ‘மாமன்” என்கிறார் ஜி-5 தென்னிந்திய மார்க்கெட்டிங் துணைத் தலைவரான லாயிட் சி.சேவியர்.
— மதுரை மாறன்