அந்த ’100—ஆவது நாள்’ போல இந்த ‘இந்திரா’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘ஜே.எஸ்.எம்.மூவி புரொடக்சன் & ’எம்பெரர் எண்டெர்டெய்ன்மெண்ட்’ ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக் தயாரிப்பில், சபரீஷ் நந்தா எழுதி இயக்கி, வரும் 22-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘இந்திரா’. டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும் இப்படத்தின் ஹீரோவாக வசந்த் ரவி, ஹீரோயினாக மெஹ்ரின் பிர்சடா மற்றும் அனிகா சுரேந்திரன், தெலுங்கு பிரபலம் சுனில், டான்ஸ் மாஸ்டர் கல்யாண், ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : பிரபு ராகவ், இசை : அஜ்மல் தஹ்சீன், எடிட்டிங் : கே.எல்.பிரவீன், ஸ்டண்ட் : விக்கி, பி.ஆர்.ஓ.: ‘எஸ்-2’ சதீஷ்குமார்.

அடுத்த வாரம் ரிலீஸ் என்பதால், ‘இந்திரா’வின் ஆடியோ & டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள நெக்சஸ் விஜயா மாலின் கீழ்தளத்தில் கடந்த சனிக்கிழமை மாலை கோலாகலமாக நடந்தது. விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் மூன்று தளங்களிலும் கூடி நின்று நிகழ்ச்சியை ரசித்து ஆதரவளித்தனர்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

 நிகழ்ச்சியில் பேசியவர்கள்….

தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக்,

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“பொதுவா எல்லா மொழிகளின் சினிமா உலகிலும், ஒரு டைரக்டர் கதை சொன்னால், யோசிச்சு சொல்றோம், அடுத்தவாரம் கூப்பிடுறோம்னு சொல்றது தான் தயாரிப்பாளர்களின் பழக்கம். ஆனால் இந்த ‘இந்திரா’வின் கதையை சபரீஷ் சொல்லி முடித்த அடுத்த வாரமே ஷூட்டிங் கிளம்பிட்டோம். அந்தளவுக்கு இந்தக் கதையின் மீது நம்பிக்கை இருந்தது. ஹீரோ வசந்த் ரவி உட்பட எல்லோருமே முழு உழைப்பைக் கொடுத்துள்ளோம். இந்தப் படம் கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது. அந்த உறுதியை என்னால் கொடுக்க முடியும். எங்களின் நம்பிக்கை ஜெயிக்கும்”.

இந்திராஹீரோ வசந்த் ரவி,

“இப்படத்தின் ஒவ்வொரு நொடியும் உங்களை வியப்பில் ஆழ்த்தும், திகிலைக் கூட்டும். நான் நடிச்சிருக்கேன்றதுக்காக சொல்லல. உண்மையிலேயே சபரீஷின் கதை சொல்லல் அப்படி இருக்கு. ஹீரோயின் மெஹ்ரின் நிறைய தெலுங்குப் படம் செய்தவர். இந்தப் படத்தில் அந்த அனுபவம் பேசுகிறது. தெலுங்கில் சுனில் சார் பண்ணாத ரோலே இல்லை. ஆனால் இந்தப் படம் கண்டிப்பாக அவருக்கு வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவி சார் எங்களுடன் கைகோர்த்த பிறகு எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முக்கியமான த்ரில்லர் படமான இந்த இந்திராவை தயாரித்த சகோதரர் ஜாஃபர் மற்றும் இர்ஃபான் மாலிக், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி”.

சுனில்,

“நான் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்து டப்பிங் பேசியுள்ளேன். ஆனால் இந்தப் படத்திற்கு டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போதே பயம் வந்துவிட்டது. அந்தளவுக்கு திகிலாக இருக்கும். தயாரிப்பாளர்களுக்கும் ஹீரோ வசந்த் ரவிக்கும் நன்றி”.

நடிகர் ராஜ்குமார்,

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

“மணிவண்ணன் சார் டைரக்‌ஷனில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘100-ஆவது நாள்’ படம் இண்டெர்வெல்லே க்ளைமாக்ஸ் போல த்ரில்லிங்கா இருக்கும். அதே போல் தான் இந்த ‘இந்திரா’வும் இருக்கும். தியேட்டரில் எல்லோரும் திகிலோடு தான் படம் பார்ப்பார்கள்”.

ஹீரோயின் மெஹ்ரின்,

“நான் மும்பையிலிருந்த போது டைரக்டர் சபரீஷ் போனில் தான் கதை சொன்னார். அறிமுக டைரக்டராக இருந்தாலும் அவரிடம் மிகத் தெளிவான சிந்தனை இருந்ததைத் தெரிந்து கொண்டேன். கதையை சொன்னது போலவே படத்தை எடுத்து, தயாரிப்பாளர்களிடம் குட்மார்க் வாங்கியுள்ளார். ஹீரோ வசந்துடன் நடித்தது இனிமையான அனுபவம். தமிழ் வசனத்தை அவர் தான் எனக்கு சொல்லிப் புரிய வைத்தார். பெயருக்கேற்றார் போல் வசந்தமானவர்”.

இந்திராமியூசிக் டைரக்டர் அஜ்மல்,

“படம் மிரட்டலாக வந்திருக்கு. என்னால் முடிந்த உழைப்பைக் கொடுத்துள்ளேன். டைரக்டரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி பின்னணி இசையமைத்து ஒத்துழைத்துள்ளேன்”.

கல்யாண்,

“டான்ஸ் மாஸ்டரா இருந்த என்னை வில்லனாக்கியிருக்கார் சபரீஷ். வழக்கமா ஹீரோ தான் வில்லனைத் தேடிப்போவார். ஆனா இதில் நான் ஹீரோவைத் தேடிப்போறேன்”.

டைரக்டர் சபரீஷ் நந்தா,

“பதினோரு வருடங்களுக்கு முன்பு ஒருபடம் பண்ண ஆசைப்பட்டு அது பாதியிலேயே நின்னு போச்சு. அப்போதிருந்து இந்தக் கதைக்காக உழைத்து வருகிறேன். எனது உழைப்பை அங்கீகரித்து வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் ஹீரோ வசந்த் ரவிக்கும் மிகவும் நன்றி. நான் த்ரில்லர் படங்களின் ரசிகன் என்பதால் இந்த ‘இந்திரா’வையும் அதே ஜானரில் தான் எடுத்திருக்கேன். என்னுடன் பணிபுரிந்து எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஆர்ட்டிஸ்டுகள், டெக்னீஷியன்கள் அனைவருக்கும் நன்றி”.

 

—    மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.