துல்கர் சல்மானின் ‘காந்தா’ மூலம் தமிழில் எண்ட்ரியாகிறார் பாக்யஸ்ரீ போர்ஸ்!
தெலுங்கில் தயாராகி, கடந்த வாரம் தமிழில் ரிலீசாகி ஈழ ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்த படம் விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’. இதில் யாழ்ப்பாண மருத்துவமனையின் டாக்டராக நடித்திருந்தார் பாக்யஸ்ரீ போர்ஸ். விஜய்தேவரகொண்டாவுடன் சில சீன்கள் தான் படத்தில் இவருக்கு இருந்தது.
இப்போது ஸ்பிரிட் மீடியா & வேஃபெரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் வரலாற்றுப் படமான ‘காந்தா’வில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகியுள்ளார் பாக்யஸ்ரீ போர்ஸ். துல்கர் சல்மான், சமுத்திரக்கனி ஆகிய இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘காந்தா’வை செல்வமணி செல்வராஜ் டைரக்ட் பண்ணிவருகிறார்.
1950-களின் சென்னைப் பின்னணியில் கதையை சொல்கிறார் டைரக்டர். ‘காந்தா’வில் கமிட்டானது குறித்து பேசும் பாக்யஸ்ரீ போர்ஸ், “எனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பான தருணம் இது. திறமையான குழுவுடன் இணைந்திருப்பது பெருமைக்குரியது” என்கிறார்.
இந்த ஆண்டின் இறுதியில் ‘காந்தா’ வெளியாகலாம்
— மதுரை மாறன்