அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சூர்யாவை சுத்தலில்விட்ட வெற்றிமாறன்!

திருச்சியில் அடகு நகையை விற்க

தனுஷின் ‘அசுரன்’ ரிலீசானவுடன் [2019] அடுத்து சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ டைரக்ட் பன்ணுவதற்காக வெற்றிமாறனுக்கு 4 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார் கலைப்புலி தாணு. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகி, சென்னை ஈசிஆர் சாலையில் டெஸ்ட் ஷூட்டும் நடந்தது. இந்த இரண்டு வேலைகளும் நடப்பதற்கே இரண்டு ஆண்டுகள் ஆனது. இதெல்லாம் முடிந்ததும் சூரி—விஜய்சேதுபதி காம்பினேஷனில் ‘விடுதலை-1’, ’விடுதலை-2’ என மூன்று ஆண்டுகளை ஓட்டிவிட்டார் வெற்றிமாறன்.

தனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..! | will vetrimaran  change the face of surya - Tamil Filmibeatசரி, இனிமேலாவது வாடிவாசலை வெற்றிகரமாக ஆரம்பிப்பார் வெற்றிமாறன் என நம்பிக்காத்திருந்தார் சூர்யா. ஆனால் வெற்றியோ கொஞ்சம்கூட வாடிவாசலைப் பற்றிக் கவலைப்படாததால், ‘ரெட்ரோ’ படத்தை முடித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு ரிலீசும் பண்ணிவிட்டார் சூர்யா. அதன் பிறகும் வெற்றிமாறனிடம் இருந்து எந்த சிக்னலும் வராததால், ஆர்.ஜே.பாலாஜியின் டைரக்‌ஷனில் ‘கருப்பு’ படத்தையும் முடித்துவிட்டார் சூர்யா.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கலைப்புலி தாணு
கலைப்புலி தாணு

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இப்பவும் வெற்றிமாறனின் அலட்சியம் தொடர்ந்ததால், கடுப்பான சூர்யா தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரியின் டைரக்‌ஷனில் நடிக்கப் போய்விட்டார் . ஆறு வருடங்களுக்கு முன்பு வெற்றிமாறனுக்கு 4 கோடி அட்வான்ஸ் கொடுத்த கலைப்புலி தாணுவோ, “எப்பா வெற்றி சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாப்பா.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

மன்மதன், வல்லவன் ரூட்டில் சிம்பு எடுத்த புது முடிவு: டபுள் தமாக்கா  சர்ப்ரைஸ்க்கு ரசிகர்கள் ரெடியா? | Actor Simbu has decided to direct a film  after 16 years - Tamil ...ஏற்கனவே மிஷ்கின் டைரக்‌ஷன்ல விஜய்சேதுபதியை வச்சு எடுத்த ‘ட்ரெய்ன்’ படத்தை விற்க முடியாம திணறிக்கிட்டிருக்கேன். இதுல நீ வேற ஆறு வருசமா இம்சை கொடுக்கிற, சூர்யாவை சுத்தலில் விடுற. இப்படி பண்ணா எப்படிப்பா?” என காரசாரமாக கேட்டதும் வடசென்னை பேக்ரவுண்டில் சிம்புவை வைத்து ஒரு படத்தை எடுக்கும் வேலைகளில் இறங்கினாராம் வெற்றிமாறன்.

அப்படின்னா.. ‘வடசென்னை-2’விலும் தனுஷ் நடிக்கப் போவதாக ஏற்கனவே வெற்றி சொன்னதும் வெட்டித்தனமா?

 

—   மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.