திருச்சி மொராய் சிட்டிக்குள் நியோமேக்ஸ் நுழைந்த கதை ! கைமாறிய சொத்துக்கள் ! சிக்கிய ஆவணங்கள் !
நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களை மதிப்பிடும் பணிகள், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. வழக்கை நீதியரசர் பரதசக்ரவர்த்தி விசாரித்து வருகிறார். நியோமேக்ஸ் நிறுவனம் தாமாக முன்வந்து சமர்ப்பித்த சொத்துக்கள்; பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் கண்டறிந்த சொத்துக்கள் ஆகியவை பட்டியலிடப்பட்டு தற்போது முதற்கட்டமாக, 16 மாவட்டங்களுக்கான மதிப்பீடு பணிகள் முடிவடையும் தருவாயில் இருந்து வருகின்றன.
முக்கியமான மாவட்டங்களில், முக்கியமான இடங்களில் உள்ள நியோமேக்ஸ் தொடர்பான சொத்துக்களை நியோமேக்ஸ் நிறுவனம் மறைத்து வருவதாகவும்; வழக்கில் சிக்கிய காலத்திலும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துக்களை கைமாற்றியிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் குற்றஞ்சுமத்தி வருகிறார்கள்.

நியோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவன ஸ்தாபகர்களுள் ஒருவரான திருச்சி வீரசக்தியின் கட்டுப்பாட்டில் இருந்த, திருச்சி மொராய் சிட்டியில் அமைந்திருந்த நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் கைமாறியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
திருச்சி மொராய்சிட்டி என்பதை முன்னுதாரணமாக காட்டியே பல இடங்களில் கல்லா கட்டியிருக்கிறார்கள். உண்மையில், மொராய்சிட்டி என்பது வேறு. நியோமேக்ஸ் வேறு. மொராய்சிட்டி என்ற தனியாருக்கு சொந்தமான இடத்தில், நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் சார்பில் இடங்களை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். அவ்வாறு வாங்கிப்போட்ட இடங்களையும் வழக்கு காலத்தில் சட்டவிரோதமான முறையில் விற்றிருக்கிறார்கள்.
திருச்சியை சேர்ந்த ஆர்.எச். பரமேஸ்வரன், நாகரத்தினம் – இளஞ்சியம் உள்ளிட்டோர்களின் பெயர்களில் இருந்த பல சொத்துக்கள் கைமாறியிருக்கின்றன. திருச்சியை சேர்ந்த பிரபல மருத்துவ தம்பதியினருக்கு குறிப்பிட்ட இடம் கைமாறியிருக்கிறது.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அங்குசம் இதழுக்கு கிடைத்த பிரத்யேக ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த 2024 டிசம்பர் 12 ஆம் தேதியில், அங்குசம் யூட்யூப் சேனலில் வெளியான காணொளிப்பதிவு இது. தற்போதைய சூழலில் அவசியம் கருதி, அங்குசம் அறம் சேனலில் மீள் பதிவு செய்யப்படுகிறது.
முழுமையான காணொளியை காண