ஏழைகளின் மருத்துவர்கள் மறைவு!
சென்னை வண்ணாரப்பேட்டையில் ஏழை மக்களுக்கு 5 ரூபாய் கட்டணத்தில், மருத்துவம் பார்த்து பிரபலமான டாக்டர் ஜெயச்சந்திரன் மனைவியும் பிரபல மகேப்பேறு மருத்துவருமான திருமதி வேணி, ஆகஸ்ட் 18- ஆம் தேதி காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் Gynaecology முடித்தார். பின்னர் மருத்துவக் கல்லூரி துறையில் தலைவராக ( HOD ) RSRM மற்றும் வேலூர் மருத்துவக் கல்லூரிகளில் 40 வருடங்கள் பணியாற்றினார்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளராகவும் தமிழ்நாடு எம் ஜி ஆர் மருத்துவ கல்லூரியின் Controller of Examinations ஆகவும் பணியாற்றியவர். மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிருக்கான மருத்துவத்தில் புகழ் பெற்ற நிபுணராக திகழ்ந்தார்.
தனது கணவர் ஜெயச்சந்திரனைப் போலவே, வண்ணாரப்பேட்டை, காசிமேடு பகுதிகளில் பெண்களுக்கு மகப்பேறு மருத்துவ பணிகள் செய்து பிரபலமடைந்தார். இதுவரையிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகப்பேறு பணிகள் செய்துள்ளார்.
பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் பாராட்டப்பெற்ற டாக்டர் ஜெயச்சந்திரனின் மறைவைத் தொடர்ந்து, அவர் விட்டுச் சென்ற சமூகப் பணிகள், அவர் வாழ்ந்த இடத்தில் அவரது குடும்பத்தார் மூலம், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
டாக்டர் திருமதி வேணி ஜெயச்சந்திரனின உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெங்கடாச்சலம் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை 21 என்ற முகவரியில் வைக்கப்பட்டு ஆகஸ்ட் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காசிமேடு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
— மதுரை மாறன்