தங்க நகைகள சேமிக்கும் சலுகை திட்டங்கள் தொிந்து கொள்ளும் ஒரே மாயாஜால வழி!
ஆண்ட்ராய்டு ஃபோனின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிங்கிள் கிளிக் கில் சில நொடிகளில் சிங்கிள் டீ யைக்கூட வீட்டிற்கு வரவழைக்கும் வித்தையை கைக்கொண்டு இருக்கிறோம்.
கற்பனைக்கெட்டாத அதிசயங்களை நிகழ்த்தும் ஆண்ட்ராய்டு ஆப்-களின் யுகத்தில் புதிய முயற்சியாக, சுவிக்கி, சொமேட்டோ போல், கொள்ளை கொள்ளும் தங்க நகைகளையும் கூட, வீட்டிற்கு கொண்டு வரப்போகிறது, பெப்பி கோல்டு ஆப்.
ஆச்சரியமாக இருக்கிறதா? இன்னும் இருக்கிறது. தங்கத்தின் மீதான மதிப்பும் மோகமும் தமிழர்களின் தனித்துவமாகவே மாறிவிட்டது. பெண் பிள்ளைகளை கொண்டிருக்கும் பெற்றோர்கள், தங்க நகை சேமிப்பை தவறாது தொடங்கியிருப்பார்கள். வருடந்தோறும் குண்டு மணி தங்கமாவது சேமித்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தை கொண்டிருப்பார்கள்.
இதுவரை அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அவர்களுக்கு அருகாமையில் உள்ள ஏதேனும் ஒரு நகை கடை ஒன்றில் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் சேர்வதுதான். குழுவில் கடன் பெற்றோ, சிறுக சேமித்த பணத்தை வைத்தோ நகை வாங்குவது என்றாலும் அவர்களுக்கு தெரிந்த ஒரு நகைக்கடைக்கு நேரில் சென்று வாங்குவது என்பதாக இருக்கும். அதிக பட்சமாக அவர்களின் வாய்ப்புக்குட்பட்டு நாலு கடைகள் ஏறி இறங்கலாம்.
அதுவே, விரல் நுனியில் தமிழகத்தின் முன்னணி நகை கடைகளிலும் ஏறி இறங்கி நகைகளை பார்த்து, விலைகளை ஒப்பிட்டு பார்த்து வாங்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? நினைத்து பார்க்கவே, ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அத்தகைய அதிசயத்தை தான் ஒரே ஆப்-பில் கொண்டு வந்து பிரம்மிக்க வைத்திருக்கிறார்கள் பெப்பி கோல்டு நிறுவனத்தார்.

ஆம். பெப்பி கோல்டு ஆப் -பில் , சிங்கிள் கிளிக் கில் தமிழகத்தில் முன்னணி நகை கடைகளின் நகை மாடல்களை பார்வையிட முடியும். அதன் விலைகளை அறிய முடியும். பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள முடியும். எந்த கடையில் நகை டிசைன் பிடித்திருக்கிறதோ அந்த நகையை, எந்த கடையில் விலை குறைவாக இரருக்கிறதோ அந்த கடையில் வீட்டில் உட்கார்ந்தபடியே பர்ச்சேஸ் செய்ய முடியும். அத்தகைய வாய்ப்பை வழங்கும் வசதிகளோடு அசத்தலாக அறிமுகமாகியிருக்கிறது, பெப்பி கோல்டு ஆப்.

திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட ஐடி இளைஞர்களின் ஐடியாவில் உருவாகியிருக்கிறது இந்த ஆப். இப்படி ஒரு ஆப் உருவாக்கப்பட்டதன் பின்னணி மற்றும் அந்த ஆப் -பின் பல்வேறு வகையான பலன்கள் குறித்தும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடுகிறார்கள் பெப்பி கோல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் அருண் பிரதீப் மற்றும் இம்மானுவேல் மணி.
— கலைமதி