செப்டம்பரில் வருகிறார் ‘மதர்’
இன்றைய டிஜிட்டல் உலகில் இளம் தம்பதிகளுக்கிடையிலான இல்லற உறவு ரொம்பவே சிக்கலாக மாறிவிடுகிறது. சிறிய சந்தேகம், அவர்களுக்கிடையே பெரிய பூகம்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதை மையப்படுத்தி தயாராகி, வரும் செப்டம்பரில் ரிலீசாகிறது ‘மதர்’ என்ற படம்.
ரெசார் எண்டெர்பிரைசஸ் பேனரில் ரேஷ்மா தயாரித்துள்ள இப்படத்தின் திரைக்கதைய சீனியர் டைரக்டர் வின்செண்ட் செல்வா எழுதியுள்ளார். சரீஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடித்து டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தின் ஹீரோயினாக அர்திகா நடித்துள்ளார். தம்பி ராமையா உட்பட பலர் நடித்திருக்கும் ‘மதர்’-ன் கதை-வசனம் ; ரூபன், ஒளிப்பதிவு :வெங்கடேஷ், இசை :ஆர்.தேவராஜன், எடிட்டர் ; சாம் லோகேஷ், ஸ்டண்ட் ; விஜய் ஜாக்குவார், பி.ஆர்.ஓ. : மணி மதன்.
முழு படப்பிடிப்பும் கொடைக்கானல் பகுதிகளில் நடந்து, இப்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடக்கின்றன. ‘மதர்’-ன் ஆடியோ & டிரெய்லர் ரிலீஸ் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும்.
-மதுரை மாறன்