அங்குசம் சேனலில் இணைய

கற்பித்தல் கற்றல் மாற்று சிந்தனைத் துளிகள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பதிமூன்று_ஆண்டுகளுக்கு_முன்பு….

“கற்பித்தல்-கற்றல்  மாற்று சிந்தனைத்துளிகள்”

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

”கற்பித்தல்  கடலில் பயணம் செய்ய

கட்டகங்கள் மட்டுமே கப்பல்களாகாது !!!

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கட்டுமரங்களையும்  நாமே உருவாக்கும்

கற்பித்தல் உபகரணங்களாலாக்கினால்

கரை  சேர்ந்து இனிதாக்கலாம்

கற்பித்தல் கடல் பயணத்தை!!!!!!!

முன்னுரை:

கற்றலும்  கற்பித்தலும் ஒன்றுடன்  ஒன்று பின்னப்பட்ட  நூலிழைகள். அவற்றின்  இயல்புகளோ , மிக மெல்லிய,அதே சமயம் உறுதியான வெளிப்பாடுகளுடன்  இருந்தால் மட்டுமே கல்வியின் நோக்கம்  நிறைவேறும்.

மனிதன்  தோன்றிய  நாள்  முதலே கற்றுக்  கொண்டு  இருக்கின்றான். தானே கற்றல்  வழியாகத்தான்   பல  நூற்றாண்டுகள்  வாழ்ந்திருக்கின்றான் என்று கூறினால்  மிகையாகாது. அங்கு  கற்பித்தல் என்பது  மறைமுகமாக  வாழ்ந்து வந்தது. இங்ஙனம்  வாழ்ந்த  கற்பித்தல்  இன்றைய  21 ஆம்  நூற்றாண்டில் பயிலும்  மாணவனுக்கு  ஒரு  சவாலாக  அமைந்துள்ளது  என்றால்  அது  சாலச் சிறந்தது.

Numeracy program | 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் கற்றல் இடைவெளிக்குத்  தீர்வு 'எண்ணும், எழுத்தும்' திட்டம் இலக்கை நோக்கிச் செல்கிறதா ...கற்றல்-கற்பித்தல்:

மாணவர்களைப்  பொறுத்து , வகுப்பறையில் நிகழும் மிக  இன்றியமையா  அனுபவங்களே கற்பித்தலும் கற்றலும் எனலாம் . ஆசிரியர்களின்  துணையின்றி இயல்பாகக்  கற்கும்  திறன்  பெற்றவன்தான்  மாணவன் . ஏனென்றால்  கற்றல்  மனிதனின்  அடிப்படைப் பண்பு . ஆனால்  வரையரைகளுக்குட்பட்ட கற்றல்களை   ஏற்படுத்திக்கொள்ள  மாணவன்  தன்னை இணைத்துக்  கொள்ளும்  தருணமும்  தளமும் தான்  வகுப்பறைக் கற்பித்தல் அனுபவமும்  வகுப்பறையும்.

மாற்றுச்  சிந்தனை 

கட்டகங்களின்  பக்கங்களை  நிரப்பிவரும் பாடப் பொருளின்  துணைக்கருவியான  புத்தகங்களை  நாம்  தொட்டுக்  கொள்ளலாமே  தவிர ,சிந்தனைகளை  அவற்றுள்  தொலைத்துவிடக் கூடாது என்பது  எமது  கருத்து ,  கொடுக்கப்பட்டப் பாடங்களை  அவன்  புரிந்தும்  புரியாமலும்  மனனம் செய்யவோ,இயந்தரத் தனமாய்  ஒப்புவிப்பதோ  எந்த  நடத்தை மாற்றங்களையும் , அவனுள் எந்த  நிலையிலும் ஏற்படுத்தி , கற்றலை  நிகழ்த்திவிடாது  என்பதும்  எனது எண்ணம்..அது பெரும்பாலான  ஆசிரியரது  கருத்துக்களும் ஆகுமே.

வகுப்பறை கற்றல்
வகுப்பறை கற்றல்

ஆகையால் பாடங்களோடு  தொடர்புடைய உலக  அனுபவங்களைப் பெற  அவனுக்கு  உதவி  செய்வதும் ,வழிகாட்டுவதும் ,துணை  நிற்பதும் ஆசிரியர்களான  நமது  தர்மம்.

வாழ்க்கையோடு  இணைந்த  கல்வியாக  வகுப்பறைக் கல்வியும்  மாற்றம்  பெற  வேண்டுமானால்  நம்  சிந்தனையிலும்  மாற்றம்  தேவை. ஏனெனில்  மிகச்  சிறந்த  சிந்தனை என்றாலும்  அது  ஒருவழிச்  சிந்தனையாக  இருந்தால் , மாணவரைப் புதுமைகளைப் படைக்கவோ , அவர்களது திறன்களை வெளிக்கொண்டு சாதனைகளைப் படைக்க  வாய்ப்புகளின்றியோ பயனற்றுப்  போய்விடும்…

இதனடிப்படையில் ஆசிரியர்களான நாம்  மாற்றுச் சிந்தனைக்கு  வழிகோல வேண்டும். இதனடிப்படையில்  தோன்றியதுதான் கீழ்வரும்  மாற்றுச் சிந்தனைத் துளிகள்….

ஹப்புல்ஸ் கான்செப்ட்(HUBBLE’S CONCEPT):

ஒளியூட்டப்பட்டத் தொலைநோக்கி:

வான்பொருள்களைக் கண்டறிய, உற்று நோக்க முதன் முதலில் தொலைநோக்கித் தந்தவர் நமது  கலிலியோ. அறிவியலின் பரிணாம  வளர்ச்சியில் இன்று அவை  ஹப்புல்ஸ் அடிப்படையில் அமைக்கப்படுகின்றன .

ஹப்புல்ஸ் (HUBBLE’S)-இது வானவெளியில் சூரிய மண்டலத்திற்கு அப்பால் பறந்து தகவல்களைச் சேகரித்து அனுப்பும் ஒரு தொலைநோக்கி .இதன்  அடிப்படைத் தத்துவம் என்னவெனில் ,இருளில் இருக்கும் பொருள்களை ஒளியூட்டி படம் எடுப்பது, அவற்றை  ஆராய்ச்சிக்காக பூமியின் ஆராய்ச்சி வல்லுனர்கள் சேகரிக்கின்றனர் .

இந்த அடிப்படைத் தத்துவம் விண்ணுலகு முதல் மண்ணுலகு வரை நமது அன்றாடப் பயன்பாட்டில் உள்ளதை நாம்  கண்ணுறலாம் . ஆம்  இது ஒரு மிகப் பெரிய சிக்கலான கருத்து. ஆனால் இதை எளிமையாக  மாணவருக்கு  கற்பித்தலில் தருவதற்காக நான் வடிவமைத்த எளிய கற்றல் உபகரணமே ஒளியூட்டப்பட்ட இரட்டைக் குழல் உருப்பெருக்கி (Lighting Binocular) .

Lighting Binocular
Lighting Binocular

ஒளியூட்டப்பட்ட இரட்டைக் குழல் உருப்பெருக்கி (Lighting Binocular)

தூரத்தில் உள்ள பொருட்களைத் தெளிவாக பெரிது படுத்தும் கருவி இது. இதற்கு எளிய முறையில்  “டார்ச்” இணைத்து ஒரு இருட் டறையில் உள்ள பொருளை மையமாக  வைத்து  நோக்கும் போது அது தெளிவாகத் தெரியும் . இதை எமது மாணவர்களுக்கு வகுப்பறையில் செய்து காண்பிக்கும் போது மிகவும் உற்சாகமாக்க் கண்டு புரிந்து கொண்டனர் .இதன் வழியாக நான்  தொடர்புபடுத்திய செய்திகள் பின்வருமாறு..இதையே  தொலை நோக்கிக்கும் பொருத்தலாம்..

ஹப்புல்ஸ் தத்துவம்,

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இருட்டில் தெரியாத் பொருட்களைக் காணல், அன்றாட வாழ்வில் நாம் காணும்-நேஷனல் ஜியோகிராஃபிக்கல் தொலைக்காட்சி சேனல்கள், காவல் துறையினரின் ஒரு பிரிவான புலனாய்வுத் துறை, இங்கெல்லாம் இந்த தத்துவம் பயன்படுத்தப்படுகிறது.

(Bank Robbery) வங்கித் திருட்டுகள்-தடுப்பு முறைகளிலும் இது போன்ற கேமராக்களில் பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் துறையில் பல வேர்களுக்கு இந்தத் தத்துவம் ஆதாரமாக உள்ளது. இதை ஆடிகள், பொருட்களின் பிம்பங்கள் பாட்த்திற்கும் பயன்படுத்தலாம் .

ஒளியூட்டப்பட்ட நுண்ணோக்கி (Lighting Microscope)

சாதாரணமாக  அறிவியல்  ஆய்வுக்  கூடங்களில் பயன்படும் நுண்ணோக்கிகள் வழியாக, நம்மால் பாக்டீரியா,வைரஸ் இவற்றைப்  பார்க்க முடியாது. இவற்றைக்  காண அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்  எலக்ட்ரான் நுண்ணோக்கிகளைப் பயன்படுத்துகின்றனர் .

அவற்றின் மதிப்போ பல கோடிகளில்.அவை பற்றிய தெளிவான அறிவை நம் மாணவருக்கு வழங்குதல் என்பது நம் நிலையில் சற்றுக் கடினமே .இதன் தத்துவமும் ஒளியூட்டலே .ஆகையால் ,நமது  அறிவியல் ஆய்வக நுண்ணோக்கிக்கு ”டார்ச்” கொண்டு ஒளியூட்டினோம்… ஒளியூட்டப்பட்ட  நுண்ணோக்கி வழியாகத் தொடர்புபடுத்தியவை…………

சூரிய ஒளியில் இயங்கும் சாதாரண நுண்ணோக்கியை,இருளில் (அ) சூரிய ஒளி கிடைக்காத இடங்களிலும் இந்த ஒளியூட்டலின் மூலம் பயன்படுத்தலாம் .

Lighting Microscope
Lighting Microscope

DNA-ஆராய்ச்சி என இன்று உலகில் அறிவியல் ஆய்வுகளில் மிக முக்கியமாகப் பயன்படுத்தும் எலக்ட்ரான் நுண்ணோக்கிகளின் தத்துவம் இதனடிப்படையில் அமைந்ததே.(இங்கு தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் .அவை மிகப் பெரும் செலவுகளில் வடிவமைக்கப் பட்டிருக்கும் Developed versions)

ஜெனிடிக் என்ஜினியரிங் என்று  கூறப்படும் ஆய்வுப்  படிப்பில் இந்த எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் பயன்படுத்தப்படும்.

சாதாரண  நுண்ணோக்கிகளில் ஆல்கே,பூஞ்சை இவற்றை Slide வழியாக்க் காணலாம்.ஆனால் வைரஸ்,பாக்டீரியா இவற்றைக் கண்டறிய எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் மட்டுமே உதவும்.

இருளிலும்,மழைக்கால மாலை வேளைகளிலும் ,பள்ளிகளில் செயல்முறை(Practical Exams) தேர்வு/செயல்முறை வகுப்புகளிலும் இது போன்ற எளிய ஒளியூட்டப்பட்ட நுண்ணோக்கிகளைப் பயன்படுத்தலாம்.

 மாணவரிடையே கிடைத்த அனுபவங்கள்/விளைவுகள்

இவற்றைக் கண்ட மாணவர்கள் ஒவ்வொரு செயலையும் அறிவியல் மனப்பான்மையோடு நோக்குகின்றனர். சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி புதிய கோணங்களில் அறிவியல் படைப்புகளை உருவாக்க  முயலுகின்றனர். அன்றாட வாழ்க்கை  நிகழ்வுகளைத் தொடர்புபடுத்த  எத்தணிக்கின்றனர் .

இவைதான் கற்பித்தல்  வழியே நாம் எதிர்பார்க்கும் விளைவு .அது ஆரம்பமாயிருக்கின்றது.

மற்றுமொரு விளைவு:

இந்தப் படைப்புகளை எங்கள் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம் பெற எனக்கு வாய்ப்பு கிடைத்தது.இந்த சிந்தனையை பல நூறு மாணவர்கள் ஆர்வத்தோடு கேட்டறிந்தனர் .அவர்களிடம்  ஏன்?எதற்கு? எப்படி? எனப்  பலவிதக் கேள்விகள். ஆர்வமிக்க  மாணவர்கள்  சிந்திக்க  இவை பயன்பட்டன. குழந்தைகளின் படைப்பாற்றல் திறன் வளர இந்தக் கற்பித்தல் உபகரணம் தூண்டுகோலாக  அமைந்தது . ஏராளமான மாணவர்கள் தொடர்பு படுத்துதலை வரவேற்று, புரிந்து கொண்டு மகிழ்ந்தனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் செய்முறை வகுப்பு: ஆக.10 முதல் விண்ணப்பிக்க தனி தேர்வர்களுக்கு அறிவுறுத்தல் | Class 10 practical exam: Instructions to ...ஏராளமான  ஆசிரியர்களும்  இதைக்  கண்டறிந்து கொண்டனர். மாற்று  சிந்தனைகளைத் தமக்குள் கொண்டுவர இதை ஒரு வாய்ப்பாக எடுத்தவரும் உண்டு . இந்த கருத்துக்கு, ஆசிரியரது பிரிவில் மாவட்ட முதலிடம் பரிசும் எனக்குக் கிடைத்தது. இதற்கு என்னை ஊக்குவித்தவர்கள் மாணவர்களே…

முடிவுரை:

எங்கோ ஒரு துளி , எங்கோ ஒரு பொறி இவை  ஒவ்வொரு  மாணவரையும் கற்கவும் , படைப்பாற்றல் திறனை  வெளிக்கொணரவும் அமைந்துவிடும் . அதற்கான களங்களை அமைத்துத் தருவதும் , சூழலை உருவாக்குவதும் தான் மிகப்பெரும் சமுதாய மாற்றங்களை உருவாக்கும் ஆசிரியரின் முதல் கடமை . ஆகையால்  நமது  கற்பித்தலில் “ வாழ்க்கையோடு தொடர்பு படுத்துதலும் , மாணவனை அவரது திறனை வெளிக்கொணர தயார் படுத்துதலும்” கண்டிப்பாக  இருக்க வேண்டும் .

அறிவியல் ஆராய்ச்சியாளராக வருவதற்கும் நம் மாணவர்களை இவை போன்ற கற்பித்தல் உபகரணங்கள் தூண்டலாம்  என்று சொன்னால்  மிகையாகாது . இதே போன்று கணிதம் ,மொழிப்பாடங்கள் என எல்லாத் துறைகளிலும்  அவர்களை நாம்  ஆயத்தப்படுத்த ,இவை போன்ற தொடர்புபடுத்தும்  உபகரணங்களை அமைப்பது இன்றியமையாதது .

”கற்பித்தல்  கடலில் பயணம் செய்ய

கட்டகங்கள் மட்டுமே கப்பல்களாகாது !!!

கட்டுமரங்களையும்  நாமே உருவாக்கும்

கற்பித்தல் உபகரணங்களாலாக்கினால்

கரை  சேர்ந்து இனிதாக்கலாம்

கற்பித்தல் கடல் பயணத்தை!!!!!!!

படைப்பு :(இது நிகழ்ந்தபோது நான் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தேன்) ( 2011-12 ஆம் கல்வியாண்டு ஜூன் மாதம்)

 

சு.உமாமகேஸ்வரி, பட்டதாரி ஆசிரியர்,

அரசு  மேல்நிலைப்  பள்ளி, நெல்லிக்குப்பம்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.