அங்குசம் சேனலில் இணைய

3 ஆண்டுக்கு பிறகு ஓய்வு முடிவை திரும்ப பெற்ற நட்சத்திர வீரர்!

கிரிக்கெட் விளையாட திரும்பி இருக்கிறார் 41 வயதான ராஸ் டைலர்

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நியூசிலாந்தியா அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ராஸ் டைலர் 3 ஆண்டுக்கு பிறகு தனது ஓய்வு முடிவை பின்வாங்கி மீண்டும் கிரிக்கெட் விளையாட திரும்பி இருக்கிறார். 41 வயதான ராஸ் டைலர், 2006 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து சர்வதேச கிரிக்கெட் அணிக்காக விளையாட தொடங்கினார். இவர் நியூசிலாந்து அணிக்காக 112 டெஸ்ட், 236 ஒருநாள் மற்றும் 102 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் மூலம், நியூசிலாந்து அணிக்காக அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றதுடன் அந்த அணியின் முக்கிய வெற்றிகளுக்கு பங்காற்றியுள்ளார். மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 உள்ளிட்ட 3 ஃபார்மேட்டையும் சேர்த்து 18,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் ராஸ் டைலர். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு தான் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார்.

நியூசிலாந்து நட்சத்திர வீரர் ராஸ் டைலர்
நியூசிலாந்து நட்சத்திர வீரர் ராஸ் டைலர்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இந்நிலையில், மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நியூசிலாந்து அணிக்காக விளையாடப்போவதில்லை, அதற்கு மாற்றாக தனது தாய் நாட்டு அணிக்காக விளையாட போவதாக தெரிவித்திருக்கிறார். ராஸ் டைலரின் தாய் சமோவோ நாட்டை சேர்ந்தவர். சமோவோ பூர்விகம் கொண்ட ராஸ் டைலர், தற்போது அந்த நாட்டு அணிக்காக ஓமனில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுக்கான போட்டியில் விளையாட உள்ளார். ஐசிசி விதிப்படி, ஒரு நாட்டு அணிக்காக விளையாடிய வீரர், வேறு ஒரு நாட்டு அணிக்காக விளையாட வேண்டுமானால், அவர் கடைசியாக விளையாடிய போட்டியில் இருந்து 3 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

நியூசிலாந்து நட்சத்திர வீரர் ராஸ் டைலர் மேலும் இதுகுறித்து பேசியிருந்த ராஸ் டைலர் ஓய்வு முடிவிலிருந்து வெளிவந்து தங்களது அணிக்கு உதவுமாறு வீரர்கள் கேட்பது சக்திவாய்ந்த விஷயமாக உள்ளது. நான் மிகவும் சிறப்பான உடல்தகுதியுடன் இருக்கிறேன் எனக் கூறமாட்டேன். ஆனால், எல்லைக்கோட்டில் வேகமாக ஓடி பவுண்டரிகளை தடுக்கும் அளவுக்கு நான் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறேன் என்றார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மேலும் தான் சமாவோ நாட்டு பூர்விகம் கொண்டவர் என்பதால், நியூசிலாந்தில் பலமுறை இனவெறியை எதிர்கொண்டதாக ராஸ் டைலர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

   —   மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.