36 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே நிலை

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

உலகக் கோப்பை 2026 கால்பந்து போட்டியில், 5 முறை சாம்பியனான பிரேசில் காலிறுதிக்கு முன்பாகவே நாக் அவுட் சுற்றில் (Round 16) வெளியேற்றப்பட்டதற்கு, இந்தியா உள்ளிட்ட உலகளாவிய அதன் ரசிகர்கள் கவலைப்படுகிறார்கள். நேற்றைய போட்டியில் நார்வே அணி பிரேசிலை வென்றதில் ஆச்சரியமில்லை.

1990ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இதே போல Round 16ல் பிரேசிலை வெளியேற்றியது அர்ஜென்டினா. 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே நிலை.

இந்த வார அங்குசம் வார இதழில்…

உலகக் கோப்பையை பிரேசில் வென்று (2002) இரண்டு மாமாங்கம் ஆகிவிட்டது. 2014ல் சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பை போட்டியில், ஜெர்மனியிடம் பிரேசில் 7-1 என பரிதாபமாக தோற்ற பிறகு, பிரேசில் தனது கால்பந்து ஆட்டத்தின் தனித்தன்மையை இழந்துவிட்டது.

ஒட்டு மொத்த அணியின் ஆட்ட நேர்த்தி தான் பிரேசிலின் சிறப்பம்சம். Team work உதவியுடன் நட்சத்திர வீரர்கள் பீலே (1958-1970) ரொமாரியோ(1994), ரொனால்டோ, ரொனால்டினோ (1998, 2002) போன்றவர்கள் அசத்தினார்கள்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இப்போதைய பிரேசில் அணி ஒரு நெய்மர், ஒரு வின்சியஸ் ஜூனியர் இவர்களை நம்பியே இருக்கிறது. இந்த நிலைமை மாறி, முன்பு போல பிரேசில் அணி உருவாக வேண்டும்.

36 ஆண்டுகளுக்கு முன் (1990) round 16ல் வெளியேறிய பிரேசில் அணி, அடுத்த உலகக் கோப்பை போட்டியில் (1994) சாம்பியன் ஆனது.

மீண்டும் தனது trade mark ஒருங்கிணைப்பு ஆட்டத்துடன், இப்போதுள்ள கால்பந்து அணிகளின் ஆட்ட முறையையும் புரிந்து கொண்டு ஆடினால் அடுத்த முறை கோப்பையை வெல்ல முடியும்.

நேற்றைய இரவில் நார்வே அணியினர் ட்ரம்ஸ் அடித்து ஆடியது போல, பிரேசிலின் புகழ்பெற்ற சம்பா நடனத்தை மீண்டும் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

– கோவி.லெனின்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.