அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பள்ளிக்கு செல்லாமல் உலகைச் சுற்றி வரும் குழந்தைகள் !

உலகக்கல்வி பயின்று வரும் பெண் குழந்தைகள்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

எங்கள் குழந்தைகளுக்கு வகுப்பறை தேவையில்லை, சீருடை தேவையில்லை, தினமும் பள்ளி செல்ல வேண்டியதில்லை! உலகம் மட்டுமே அவர்களின் பாடம்” என்று தங்களின் மூன்று பெண் குழந்தைகளை வழக்கமான கல்வி பயிலும் முறையயை மாற்றி அனைவரது கவனத்தையும் பெற்று இருக்கின்றனர் அமெரிக்க தம்பதியினர்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த டயானா மற்றும் ஸ்காட் பிளிங்க்ஸ் தம்பதியினர் தங்களது மூன்று மகள்களையும் உலகக் கல்வி கற்பித்து வருகின்றனர். இவர்கள் தினமும் வகுப்பறைக்குச் சென்று பாடம் கற்றுக் கொள்வதில்லை மாறாக ஒரு கண்டம் விட்டு கண்டம் அழைத்துச் செல்லப்பட்டு பயணங்கள் மூலம் அங்கு வாழ்க்கை பாடம் படிக்கின்றனர். இவர்களுக்கு தேர்வு, வீட்டுப்பாடம், வகுப்பறை, சீருடை எதுவும் தேவையில்லை.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

உலகைச் சுற்றி வரும் குழந்தைகள்ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அந்தந்த நாட்டின் கலாசார மொழிகளை கற்றுக்கொள்கின்றனர். இந்த லூசில் (12), எடித் (11) மற்றும் ஹேசல் (9) என்ற மூன்று சகோதரிகளும் ஏதென்ஸில் கிரேக்க புராணங்களைக் கற்றுக்கொள்கிறார்கள், ஸ்பெயினில் ஃபிளமெங்கோ நடனத்தைப் பயிற்சி செய்கிறார்கள், மாண்டினீக்ரோவில் கடல் பாதுகாப்பை ஆராய்கிறார்கள். இப்படி உலகம் முழுவதும் சுற்றி வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்கின்றனர்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

உலகைச் சுற்றி வரும் குழந்தைகள்இது குறித்து இவர்களின் பெற்றோர்களான டயானா மற்றும் ஸ்காட் கூறுகையில், எங்களது மகள்கள் புத்தகத்தில் இருந்து மட்டும் இல்லாமல், வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள். கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. அப்போது எங்களது மகள்கள் வீட்டில் இருந்து, கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிலிருந்து இந்த எண்ணம் எங்களுக்கு தோன்றியது. தற்காலிகமாக இருந்ததை நிரந்தர வாழ்க்கை முறையாக மாற்ற நாங்கள் நினைத்தோம்.

யாவரும் கேளீர்

உலகைச் சுற்றி வரும் குழந்தைகள்பொதுவாக வீட்டில் இருந்து கல்வி கற்றுக் கொள்வது எவ்வளவு மகிழ்ச்சிகரமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது, எனவே வீடுதான் முழு உலகமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து உலகம் முழுவதும் உலக கல்வி பயில தங்களது மகள்களை அழைத்துக்கொண்டு பயணிக்க தொடங்கிவிட்டோம்” என்கின்றனர், இந்த அமெரிக்க தம்பதியினர்.

அப்போதிருந்து, இந்த ஸ்காட் பிளிங்க்ஸ் குடும்பம் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளது. ஐஸ்லாந்து, தாய்லாந்து, போர்ச்சுகல், மொராக்கோ மற்றும் இப்போது உருகுவே போன்ற பல்வேறு இடங்களில் வசித்து வருகிறது. அவர்களின் முதல் ஆண்டில் மட்டும், கோஸ்டாரிகா, மெக்சிகோ உட்பட சுமார் 22 நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

    —     மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.