அங்குசம் சேனலில் இணைய

அங்குசம் பார்வையில் ‘யோலோ’ 

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ‘எம்.ஆர்.மோஷன் பிக்சர்ஸ்’ மகேஷ் செல்வராஜ், டைரக்‌ஷன் : எஸ்.சாம், ஆர்ட்டிஸ்ட் : தேவ் [ அறிமுகம் ], தேவிகா சதீஷ், படவா கோபி, விஜே நிக்கி, சுபாஷினி கண்ணன், பிரவீன், ஸ்வாதி, யுவராஜ் கணேசன், திவாகர், கலைக்குமார், தீபிகா, மாதங்கி, ஒளிப்பதிவு : சூரஜ் நல்லுசாமி, இசை : சகிஷ்னா சேவியர், எடிட்டிங் : ஏ.எல்.ரமேஷ், பி.ஆர்.ஓ : சதீஷ் [ எய்ம்]

ஹீரோயின் தேவிகா சதீஷை பெண் பார்க்க வருகிறார்கள் விஜே நிக்கி, அவரது அக்கா, அத்தான். காபி கொடுக்க வரும் தேவிகாவைப் பார்த்து, “என்னங்க ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணு  காபி கொடுக்குது” என நிக்கியின் அக்கா சொன்னதும் அதிர்ச்சியாகிறார்கள் தேவிகாவும் அவரது அப்பா படவா கோபியும். “எனக்கே தெரியாம, எனக்கு எப்ப கல்யாணம் ஆச்சு. என்னைக் கல்யாணம் பண்ணுனதா சொன்னவன் எவன்?” என்ற குழப்பத்துடன், அந்தக் மாயக் கணவன் ஹீரோ தேவ் தான் என்பதையும் கண்டு பிடித்து, அவனைத் தேடிப் போகிறார் தேவிகா சதீஷ்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

யோலோஅடடா…அருமையான லைனை கையில் எடுத்துருக்காரே டைரக்டர்? என ஆசையுடனும் ஆர்வமுடனும் உட்கார்ந்தா… அதுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் இருபது நிமிசம் நம்மள மெகா சைஸ் கிரைண்டர்ல போட்டு அரைச்சு வெளியே தள்ளிட்டாய்ங்க.

பேய்க்கும் பேய்க்கும் கல்யாணம் நடந்துச்சாம். அது இப்ப உயிரோட இருக்கிற தேவ்-தேவிகா பேர்ல நடந்துச்சாம். அந்தக் கல்யாணத்துக்கு டைவர்ஸ் கேட்டு  உயிரோட இருக்கும்  இரண்டு பேரும் கோர்ட்டுக்குப் போறாகளாம். கோர்ட்டும் டைவர்ஸ் கொடுக்குதாம். திடீர்னு டிஜிட்டல் சாமியார் ஒருத்தன் எண்ட்ரியாகிறானாம். பேய்க்கும் பேய்க்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்றானாம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

யோவ் டைரக்டரே….எங்களையெல்லாம் பார்த்தா உங்களுக்கு எப்படியா தெரியுது?

யோலோபடத்துல ஹீரோ தேவ்வும் ஹீரோயின் தேவிகா சதீஷும் தங்களால்  முடிந்த வரை இத்துப் போன கதைக்கு ஈயம் பூசப்பார்த்திருக்கிறார்கள். ஆனால் என்ன பிரயோஜனம்…? இவர்கள் இங்கிட்டு சுத்தினால், டைரக்டர் அங்கிட்டு சுத்திவிடுறார். அவர்கள் அங்கிட்டு சுத்தினால்…டைரக்டர் இங்கிட்டு சுத்திவிடுறார். இப்படியே சுத்திச்சுத்திவிட்டு படத்தை முடிக்க ரொம்பவே படாதபாடுபட்டு நம்மளையும் சுத்தலில் விட்டுவிட்டார் டைரக்டர்.

ஹீரோ தேவ் நடத்தும் யூடியூப் சேனலுக்குப் பேர் தான் ‘யோலோ’.

“ஆயாலோ….ஆயலோ…ஆயலங்காடி…ஆயலோ…

 

    —    ஜெடிஆர் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.