அங்குசம் சேனலில் இணைய

தி கான்ஜுரிங் அமானுஷ்ய வீடு விற்பனைக்கு !

பல்வேறு குழப்பமான நிகழ்வுகளை கூறும் தி கான்ஜுரிங் வீடு

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

2013 ஆம் ஆண்டு வெளியான தி கான்ஜுரிங் படத்தில் இடம் பெற்றிருந்த வீடு தற்போது ஏலத்திற்கு வருகிறது. ரோட் தீவில் உள்ள பர்ரில்வில்லே நகரத்தில் அமைந்துள்ள இந்த வீட்டில் பெரான் குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்த வீட்டில் பெரான் குடும்பத்தினர் குடிபுகுந்தபோது பல்வேறு குழப்பமான நிகழ்வுகளை அனுபவித்ததாக கூறியிருந்தனர். அதனையடுத்து இந்த வீடு தி கான்ஜுரிங் படத்தில் இடம் பெற்றிருந்தது. அதன் பின்னர் இந்த வீடு மேலும் பிரபலம் அடைந்தது. அமானுஷ்ய வீடாக கருதப்பட்டு அதனை பல ஆய்வாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பார்த்து வந்தனர்.

இப்போது இந்த சொத்து சில நிதி சிக்கல்களில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இதன் உரிமையாளர்கள் இதனை விற்க முன்வந்துள்ளனர். இருப்பினும் கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஜாக்குலின் என்பவர் இந்த வீட்டை வாங்கி ஒரு அமானுஷ்ய பேய் சுற்றுலா வணிகமாக மாற்றினார். ஆர்வமுள்ளவர்கள் இந்த இடத்தில் இரவு முழுவதும் தங்க அனுமதிக்கப்பட்டது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அமானுஷ்ய பேய் வீடுஅந்த அமானுஷ்ய சுற்றுலா நல்ல வரவேற்பை பெற்றபோதிலும் பல்வேறு சர்ச்சைகளில் இந்த சொத்து சிக்கியதை அடுத்து அதிகாரிகள் பொழுதுபோக்கு உரிமத்தையும் ரத்து செய்தனர். தனது உரிமத்தை இழந்ததை மறைத்த ஜாக்குலின் தொடர்ந்து அமானுஷ்ய சுற்றுலா நடத்துவதாக குறிப்பிட்டு பலரிடம் பல்லாயிரக்கணக்கான பணத்தை பெற்றிருக்கிறார். எனவே அந்த அமானுஷ்ய வீடு மேலும் மேலும் பல சர்ச்சையில் சிக்கியது. இப்படி இருக்கையில் இந்த வீடு தற்போது விற்பனைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

 

    —    மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.