கஞ்சா கேஸில் கைதானால் குண்டாஸ் கன்பார்ம் ! அதிரடி எஸ்.பி.!
கஞ்சா வழக்கு மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 12 குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து அதிரடி காட்டியிருக்கிறா்கள் திருச்சி மாவட்ட போலீசார். இது தொடா்பாக போலீசார் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”திருச்சிராப்பள்ளி மாவட்டம் ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கனூர் கிராமத்தில் உள்ள உருண்டைமலை பின்புறம் உள்ள பாறைகுழி அருகே கடந்த 07.08.2025-ஆம் தேதி அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மெய்யப்பன் வயது 31, த.பெ. செல்வம், ஷேக் மொய்தீன் காலனி, புங்கனூர், தாயனூர் ராம்ஜிநகர் (Thiruverumbur PEW. HS.No. 15/25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சாவை கைப்பற்றப்பட்டு அவர் மீது திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு குற்ற எண். 223/25, U/s 8(c) r/w 20(b)(ii)(B) of NDPS Act அனுப்பப்பட்டார்.
மேலும், புத்தாநத்தம் மற்றும் துவரங்குறிச்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீதுபுத்தாநத்தம்காவல நிலைய குற்ற எண். 244/25, U/s 310(2), 333, 127(7), 311, 351 (3). 332(B) BNS (Old Sec. 345, 347, 450, 452, 397, 506(II) IPC வழக்கின் எதிரிகள் 1.அழகேஸ்வரன் 23/25, த.பெ தங்கராஜ், குளத்துப்பட்டி, எழமணம், மணப்பாறை தாலுக்கா, (Puthanatham PS. HS No.03/25) 2.சுபாஷ் சந்திரபோஸ் 25/25, த.பெ மணிகண்டன், மாடபுரம், திருபுவனம், சிவகங்கை மாவட்டம் (Puthanatham PS, HS No.04/25) 3. கரண் 21/25த.பெ ஜெயராம், காலப்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம் 4. நவநீத கிருஷ்ணன் 24/25 த.பெ கணேசன், நல்லகண்டம், நத்தம் தாலுக்கா, திண்டுக்கல் மாவட்டம் (Puthanatham PS, HS No.05/25) 5. வெள்ளைச்சாமி 34/25 த.பெ கதிரேசன், வளையன்குளத்துப்பட்டி,

மேலூர், மதுரை மாவட்டம் (Puthanatham PS. HS No.07/25) 6. மணிகண்டன் 25/25 த.பெ துரைபாண்டி, கோவிந்தசாமி, திருபுவனம், சிவகங்கை மாவட்டம் (Puthanatham PS, HS No.09/25) ஆகியோர் மீதும், . 4/25, U/s 329(4), 127(2), 309(4) BNS (Old Sec. 448, 342, 392 IPC) வழக்கின் எதிரிகள் 1. குட்டி (எ) சங்கபிள்ளை 23/25 த.பெ ஆறுமுகம், புத்தாநத்தம் (Thuvarankurichy PS, HS No.05/25) 2. ஹரிஹரன்22/25 த.பெ வேலுச்சாமி, அரியம்பட்டி, கருப்பூர், மணப்பாறை (Thuvarankurichy PS, HS No.06/25) 3. 22/25 த.பெ வெள்ளைதம்பி, பண்டங்குடி, மேலூர், மதுரை (Thuvarankurichy PS, HS No.09/25) 4. அரவிந்த்ராஜ் 21/25 த.பெ செல்வம், பண்டங்குடி, மேலூர், மதுரை மாவட்டம் (Thuvarankurichy PS, HS No.07/25) 5. ஸ்ரீராம் 21/25 த.பெ ஜெகநாதன், சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டம் (Thuvarankurichy PS, HS No.08/25) ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேற்படி மூன்று குற்ற வழக்குகளிலும் தொடர்புடைய 12 எதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில் மேற்படி எதிரிகள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு நேற்று 14.09.2025-ஆம் தேதி சிறையில் உள்ள எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 2025 முதல் தற்போதுவரை மொத்தம் 85 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது” என்பதாக தொிவித்திருக்கிறா்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு
Comments are closed, but trackbacks and pingbacks are open.