அங்குசம் சேனலில் இணைய

பார்த்தால் கனிமொழி, நாடாளுமன்றத்தில் கர்ஜனை மொழி ! முதல்வரின் புகழாரம் !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கரூர் மாவட்டம் கரூர் மாநகர புறவழிச்சாலையில் உள்ள கோடாங்கிப்பட்டி பகுதியில், திமுக முப்பெரும் விழா செப்டம்பர் 17 அன்று நடைபெற்றது. நுழைவாயிலில் இருந்து வேனில் நின்றுகொண்டு கட்சித் தொண்டர்களை பார்த்து கையசைத்தபடியே பயணித்து தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மேடைக்கு வந்தார். திமுக முப்பெரும் விழாவில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு, பெரியார் வி கோடாங்கிப்பட்டி ருதை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.

கனிமொழி
கனிமொழி

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

விழாவில்  பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி.; ஆங்கிலத்தில் ‘All roads lead to rome’ என்று சொல்வார்கள். அதன்படி இந்தியாவின் பார்வையை இன்று கரூருக்கு திருப்பியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு கனவு இருக்கும். எனக்கு இருக்கும் ஒரே கனவு, தலைவர் கலைஞர் பெற்ற பெரியார் விருதை பெறுவது தான். அதனை இன்று பெற்றிருக்கிறேன். அதை நிறைவேற்றி தந்த நமது முதலமைச்சர், திமுக தலைவர், அண்ணன் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொட்டும் மழையிலும் இங்கு நிற்கக் கூடிய உடன்பிறப்புகளை பார்க்கும்போது, ’இந்த படை போதுமா?’ என கேட்கத் தோன்றுகிறது. அதோடு எந்த தேர்தலையும், எந்த பகைவர்களாக இருந்தாலும், அது நம்முடைய பரம்பரை பகைவர்களாக இருக்கட்டும், பாரம்பரிய பகைவர்களாக இருக்கட்டும் அல்லது புதிதாக வரக்கூடியவர்களாக இருக்கட்டும் அத்தனை பேரையும் வென்றுகாட்டுவோம் என சூளுரைக்கக்கூடிய இந்த படை போதும். திமுகவிற்கு வெற்றி நிச்சயம்” என பேசினார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

கனிமொழி
கனிமொழி

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தொடர்ந்து, “பகுத்தறிவு பகலவன்” தந்தை பெரியார் விருது பெற்ற கனிமொழி கருணாநிதியைப் பற்றி, “அவரைப் பார்த்தால் கனிமொழி, நாடாளுமன்றத்தில் பேசினால் கர்ஜனை மொழி, திராவிட இயக்கத்தின் திருமகளாக, பெரியாரின் பேத்தியாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கிறார்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். பெரியார் விருதுக்கு வழங்கப்பட்ட ரூ.3 இலட்சத்தை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்று கனிமொழி கருணாநிதி எம்.பி. வழங்கியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

-மணிபாரதி

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.