பிஜேபி – ஆர்எஸ்எஸ் கூட செய்ய முடியாத ஒன்று இது !
கொஞ்சம்பேர் கிளம்பியிருக்கிறார்கள்: பெரியாரை அறியாத ஒரு பெருங்கூட்டம் இளைஞர்களிடம் விஜய் பெரியாரைக் கொண்டு சேர்த்திருக்கிறார்; ஆகவே விஜயை ஆதரிக்க வேண்டும் என்று.
விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டாண்டுகள் ஆகின்றன. பெரியாரை, அண்ணலைக் குறித்த எத்தனை வகுப்புகள், கருத்தரங்குகள் அக்கட்சி சார்ந்த இளைஞர்களுக்கு, ஆதரவாளர்களுக்கு நடத்தப் பட்டிருக்கின்றன? ஒன்று கூட இல்லை.
படப்பிடிப்பு நடத்துவதற்கு முன் அட்மாஸ்பியர் செட் போடுவது போல, இரண்டு மாநாடுகளில் பெரியார், அண்ணல் படங்கள் வைக்கப் பட்டிருக்கின்றன. அவ்வளவுதான்.
ஒரு படத்தில் வில்லன் கொலை செய்யும் போது பரந்தாமனுக்கு ஸ்தோத்திரம் என்று சொல்வதை மேனரிசமாகக் கொண்டிருப்பான்.
அதே மாதிரி பெரியார் படத்தை வைத்துக் கொண்டு சில்லுண்டித்தனம் செய்தால் கூட நாம் ஆதரிக்க வேண்டுமா?
அறிமுகமற்ற ஒரு பெரிய கூட்டம் இளைஞர்களிடம் விஜய் பெரியார் படத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறார் என்று புல்லரித்துப் போவோர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.
விஜய் பெரியாரை மக்களிடம் கொண்டு போகவில்லை. மாறாக ஒரு பெரிய எண்ணிக்கையிலான இளைஞர்களிடம் திமுக வெறுப்பையே கொண்டு போய்ச் சேர்த்துள்ளார்.
பிஜேபி ஆர்எஸ்எஸ்ஸால் கூட செய்ய முடியாத ஒன்று இது. உங்களுக்கு உடன்பாடுதானா இது?
ராமதாஸ் கட்சி ஆரம்பித்த போது அன்றிருந்த எம்எல் இயக்கத்தவர் ஒரு பெரும் எண்ணிக்கையில் ஆனவர்கள் ஒரு மந்தையைப் போல முண்டியடித்துக் கொண்டு போய் அவருக்கு முற்போக்கு முகத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
விளைவு என்ன ஆனது என்பதைப் பார்த்தோம்.
நீங்களும் அதைத்தான் செய்யப் போகிறீர்களா?
— மணி மதிவாணன், கட்டுரையாளர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.