அங்குசம் சேனலில் இணைய

திட்டமிட்ட சதிதான் ! யார் திட்டமிட்டது ?

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தவெக விஜய் நேரில் தோன்றி பேசி வெளியான காணொளி தற்பொழுது பரவி வருகிறது. இதை முழுமையாக கவனியுங்கள். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு தலைவர் என்பவர் வரவேண்டும். மிகவும் காலதாமதம் ஆக ஆறு மணி நேரம் 7 மணி நேரம் வருவதன் நோக்கம் என்ன என்பது பற்றி பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

கட்டுக்கடங்காத அலைமோதும் கூட்டத்திற்கு காரணம் இவருடைய தாமதமே. இதைப்பற்றி எந்த பதிலும் சொல்லவில்லை. இப்பொழுதும் சினிமாவில் எழுதிக் கொடுக்கப்பட்ட வசனங்களைப் போல. என்ன என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என் நண்பர்களை விட்டு விடுங்கள் என பேசுவது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இன்னும் தமிழ்நாட்டு மக்கள் ரசிகர்கள் எவ்வளவு கேனையர்கள் ஆக எதை சொன்னாலும் , நம்பக்கூடிய முட்டாள்களாக இருந்தால் இப்படி ஒரு வீடியோ பதிவிடுவார்?

இத்தனை கொலைகள் செய்த பின்னரும்,  முன்பை காட்டிலும் இன்னும் அதிகமாக செயல்பாடுகளை கொண்டு செல்வேன் என பேசுவதற்கு யார் கொடுத்த துணிச்சல்?

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

விஜய் அரசியல்
விஜய் அரசியல்

”சினிமா போதையால் சீரழிந்து உயிரையும் விடும் அளவுக்கு மடையர்கள் இருக்கிறார்கள்” என்கின்ற நம்பிக்கை விஜய்க்கு அவரை வழிநடத்தும் பாசிச கும்பலுக்கு இருப்பதாலே தான், மீண்டும் வேகமாக செயல்படுவேன் என பதிவு செய்கிறார்.

நான் முன்பே எச்சரித்தேன்… தமிழ் இன துரோகி சீமான் ஈழ மக்களின் பிணத்தைக் காட்டி தமிழக அரசியலில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுண்ணியை போல… நாளை கரூர் மக்களின் குழந்தைகளின் உயிரற்ற உடல்களை காட்டி, நமது கட்சிக்காக தியாகம் செய்த தொண்டர்கள் என புகழாரம் சுற்றி அதையே தன்னுடைய கட்சிக்கு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி… மீண்டும் இந்த கழிசடை அரசியல் பயணத்தில் வருவதற்கு திட்டமிடுகிறது.

தற்பொழுது…. தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக.. காலூன்ற முடியாது. ஆனால், எத்தனை உயிர்களை பலி கொடுத்தேனும் அது அதிகாரத்திற்கு வர துடிக்கும். புல்வாமா தாக்குதலில் நமது வீரர்களை பலி கொடுத்து அதை மக்களிடம் காட்டி.. ஆட்சியை கைப்பற்றியது.

தன்னை தக்க வைத்துக்கொள்ள… இறந்து போனவர்களை எழுந்து வந்து ஓட்டு போட வைத்தது. ஒரே குடும்பத்தில் 250 ஓட்டு இருப்பதாக நம்மை நம்ப வைத்தது. இப்படி ஓட்டை திருடி ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட ஓட்டு திருடனை பதவியில் இருந்து தூக்கி ஏறிய வேண்டும் என்கின்ற குரல், இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் ஒழித்துக் கொண்டிருக்கிற போது, மக்கள் அதை கவனித்துக் கொண்டு பிஜேபிக்கு எதிராக வந்து விடக்கூடாது என அதிலிருந்து மடைமாற்றம் செய்யவே, இந்த கரூர் சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றிருக்கலாம் என சந்தேகிக்கிறேன்.

ஆம்.. எப்பொழுதெல்லாம்.. ஆர் எஸ் எஸ் சங்பரிவார் அமைப்பு அதன் அரசியல் அடிவருடியான பிஜேபி.. அதன் தில்லுமுல்லுகள் அதன் கொலைகள்.. மக்கள் மன்றத்திற்கு வெளிச்சத்திற்கு வருகின்றதோ… அல்லது விவாதப் பொருளாக மாறுகின்றதோ… அப்பொழுதெல்லாம் வேறு ஒரு பிரச்சனையை திட்டமிட்டு உருவாக்கி திசை திருப்புகிறார்கள்… அதன் மூலம் ஏற்கனவே மக்கள் பேசிக் கொண்டிருக்கின்ற விஷயத்தை மறந்து புதிதாய் உருவாக்கப்பட்டு இருக்கும் விஷயத்தில் கவனம் கொடுக்க தொடங்குகிறார்கள். இப்படி பல சம்பவங்களை நாம் கூறலாம்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இவ்வளவு பெரிய துயர சம்பவம் 9 ஏதுமறியாத  குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர்.  உயிரை இழந்தும் தன் மீது கட்டப்பட்டிருக்கும் சினிமா துன்பத்தை சிதறவிடாமல் அதை பாதுகாத்து வைத்துக்கொண்டு, இன்னும் வேகமாக செயல்படுவேன் என்று எப்படி சொல்ல முடியும். இதற்கு மேலும் அரசியலுக்கு நான் தகுதியற்றவன் என்னுடைய கட்சி எந்த வகையிலும் தகுதியற்றது என உணர்ந்து அரசியலில் இருந்து வெளியேறுகிறேன் எனது கட்சியை கலைத்து விடுகிறேன் என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும். ஒரு தலைவன் என்பதற்கு வெளியில் இருந்து மக்கள் சொல்லுகின்ற எதார்த்தமான ஒரு தகுதி கூட என்னிடம் இல்லை என்று சுய விமர்சனமாக அல்லவா விஜய் வந்திருக்க வேண்டும்.

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்

இத்தனை சாவுகள் நடந்த பிறகு, நடிகன் விஜய் தஞ்சம் அடைந்த குரு மூர்த்தி யார்! புஸ்ஸி ஆனந்த் யார்? என்பதை தயவு செய்து ஆராய்ந்து பாருங்கள் இளைஞர்களே, நான் சொல்வதில் உண்மை இருப்பதை கூட உங்களால் உணர முடியும். மாதம் 12 லட்சம் ரூபாய் மத்திய அரசாங்கம் செலவு செய்து Y பிரிவு பாதுகாப்பு விஜய்க்கு ஏன் ? தரப்பட்டது.

சீமான், எடப்பாடி, நரேந்திர மோடி, தமிழிசை, சவுக்கு சங்கர், அன்புமணி, அண்ணாமலை…. இவர்களெல்லாம் யார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். கரூர் சம்பவம் குறித்து இவர்கள் வெளியிட்ட அறிக்கை என்ன? ஆராய்ந்து பாருங்கள். இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பாஜக தாமரை மலர வேண்டும் என விரும்புகின்றவர்கள் பிரச்சாரம் செய்கின்றவர்கள்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, அதிமுக வா? திமுக வா? அல்லது காங்கிரசா? அல்லது நாம் தமிழரா ? விஜயா ??? என்று கணக்கிடுவது முட்டாள்தனம்.

பார்ப்பன காவி பாசிசம் நம்மை ஆள அனுமதிக்க கூடாது. அப்படி விட்டு விட்டோம் என்று சொன்னால் நாம் பெற்ற சுயமரியாதை தொடங்கி வாழும் உரிமை வரை அனைத்தையும் இழக்க நேரிடும்.

பார்ப்பனியம் மனுதர்மம் சனாதனம் இவை அனைத்தும் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு யாரையும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும். அதற்கு எந்த சமூக மக்களாக இருந்தாலும் பலி கொடுக்கவும் தயங்காது. இத்தனை உயிர்கள் போன பின்னரும் எப்படி மீண்டும் இன்னும் தீவிரமாக நான் செயல்படுவேன்.. நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று நடிகன் விஜயால் பேச முடிகிறது.

நாம் கற்ற கல்வி, போராடி நமக்காக பெற்றுக் கொடுத்த பகுத்தறிவு கொண்டு உண்மையான நண்பர்கள் யார் எதிரிகள் யார்? என்று தீர்மானிக்கின்ற மிக முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

மாமேதை லெனின் சொல்வார், உனக்கான அரசியலை நீ பேசவில்லை விரும்பவில்லை என்றால்… நீ விரும்பாத அரசியலால் ஆளப்படுவாய்.. என்று.

 

 —   செ.கார்க்கி, திருச்சி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.