அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘இட்லி கடை’

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு : ‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன் & ‘ஒண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தனுஷ். தமிழ்நாடு ரிலீஸ் : இன்பன் உதயநிதி வழங்கும் ‘ரெட் ஜெயண்ட்’. எழுத்து-இயக்கம் : தனுஷ். நடிகர்-நடிகைகள் : தனுஷ், ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மெனன், அருண்விஜய், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், இளவரசு வடிவுக்கரசி, பிரிகிடா சாஹா, வேல்ராஜ். எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : ஸ்ரேயாஸ் ஸ்ரீனிவாசன், ஒளிப்பதிவு : கிரண் கெளசிக், இசை : ஜி.வி.பிரகாஷ்குமார், ஆர்ட் டைரக்டர் : ஜாக்கி, எடிட்டிங் : ஜி.கே.பிரசன்னா, ஸ்டண்ட் : பீட்டர்ஹெய்ன், நடனம் : சதீஷ் கிருஷ்ணன், காஸ்ட்யூம் டிசைனர் : காவ்யா ஸ்ரீராம். பி.ஆர்.ஓ. : சதீஷ் [ எய்ம் ], ரியாஸ் கே.அஹமது.

தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் சிவனேசன் [ ராஜ்கிரண் ] இட்லி கடைன்னா ரொம்பவே பிரபலம். கூரைக் கொட்டைகை, அதில் இரண்டு மரப்பெஞ்சு இதான் இடலி கடை. ஆட்டுக்கல்லில் அரைத்த இட்லி மாவு, அம்மிக்கல்லில் அரைத்த மசாலா, இதனுடன் சிவனேசனின் கைப்பக்குவத்தில் கமகமக்கும் சாம்பார் இதான் அவ்வூர் மக்களைச் சுண்டியிழுக்கிறது. அதிகாலை 3 மணிக்கே எழுந்து குளித்து, இட்லி கடையைத் திறக்க சிவனேசன் போகும் போது, பள்ளிச் சிறுவன் முருகனும் [ தனுஷ்] போகிறான். தந்தையின் சமையலைக் கவனிக்கிறான்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கல்லூரியில் முருகன் படித்து முடித்துவிட்டு சென்னைக்குக் கிளம்பிப் போகிறான். அங்கிருந்து ஹாங்காங் தலைநகர் பாங்காக்கில் சத்யராஜின் கார்ப்பரேட் உணவகத்தில் உயர் பொறுப்பில் இருக்கிறார். முருகனின் நிர்வாகத் திறமையைப் பார்த்து தனது மகள் ஷாலினி பாண்டேவை கல்யாணம் செய்துவைக்க முடிவெடுத்து அதற்கான வேலைகளையும் ஆரம்பிக்கிறார் சத்யராஜ். ஷாலினி பாண்டேவின் அண்ணன் அருண்விஜய் ஒரு ஊதாரி, சூதாடி. தனுசுக்கு தனது தங்கையைக் கல்யாணம் செய்து கொடுப்பது பிடிக்கவில்லை.

Idly Kadai Review: இட்லி கடை விமர்சனம்.. தனுஷின் அகிம்சை இட்லி.. சூப்பரா?  சுமாரா? | Idly Kadai Review in Tamil: Dhanush makes a Ahimsa Idly for this  generation - Tamil Filmibeatகல்யாண வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் சங்கராபுரத்தில் இறந்துவிடுகிறார் ராஜ்கிரண். அப்பாவின் சாவுக்கு கிளம்பும் தனுஷுடன் தனது மேனேஜர் ராமராஜனை [ இளவரசு ] அனுப்புகிறார். அப்பா இறந்து சில நாட்களிலேயே அம்மாவும் [ கீதா கைலாசம் ] இறந்துவிடுவதால் சங்கராபுரம் கிராமத்திலேயே தங்கும் நிலைமை தனுசுக்கு. தனது அப்பா நடத்திய இட்லி கடையை புதுப்பிக்கிறார். இதனால் மகளின் கல்யாணம் தடைபட்ட கோபத்தில் பாங்காக்கிலிருந்து மகன் அருண்விஜய், மகள் ஷாலினி பாண்டேவுடன் சங்கராபுரம் வருகிறார் சத்யராஜ்.
தனுஷ்-ஷாலினி பாண்டே திருமணம் நடந்ததா? சிவனேசன் இட்லி கடை என்னாச்சு? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘இட்லி கடை’.

https://www.livyashree.com/

பள்ளிச் சிறுவனாக இருக்கும் போது அப்பா-அம்மா, கிராமப் பாசம், கல்லூரி முடித்ததும் எதிர்காலக் கனவுடன் சென்னைக்குப் போய் அங்கிருந்து பாங்காக் போவது, மீண்டு சங்கராபுரத்திற்கே வந்து சிவனேசனாகவே மாறுவது என மூன்று காலகட்டங்களின் கேரக்டர்களை மிக நன்றாகவே உள்வாங்கி, திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஹீரோ தனுஷ். குறிப்பாக க்ளைமாக்ஸுக்கு முன்பாக சமுத்திரக்கனியை புரட்டி எடுத்து, “ஒனக்கு என்னதான்யா வேணும்” என கோபத்தில் கொந்தளிக்கும் சீனில் தனுஷ் என்ற சிறந்த நடிகன் திரையில் தெரிகிறான்.

மேம்பட்ட வாழ்க்கைன்னா என்ன? என்பது குறித்து ராஜ்கிரணுக்கும் தனுஷுக்கும் இடையே நடக்கும் உரையாடல், அப்பாவின் நினைவாக முத்து என்ற கன்றுக்குட்டி, சிவனேசனாகவே மாறிய பிறகு ஊர்ஜனங்கள் காட்டும் பாசம், சங்கராபுரம் திரும்பி இட்லி கடையை ஆரம்பிக்க உதவும்[கயல்] நித்யாமெனனுடனான காதல், எட்டாவது படிக்கும் போதே கயலலைக் காதலித்த நினைவுகள், அம்மா-அப்பாவையும் சொந்த மண்ணையும் உறவுகளையும் உதறிவிட்டுப் போகும் எல்லோருமே ஊதாரிகள் தான் என விட்டேத்தியாகப் பேசும் இடம், அப்பாவின் ‘அகிம்சையே சிறந்த ஆயுதம்’ என்பதில் உறுதியாக இருப்பது, பார்த்திபனையும் நித்யா மெனனையும் கூட தேனி வட்டார பாஷையை பேச வைத்தது இவற்றிலெல்லாம் இயக்குனர் தனுஷ், டைரக்‌ஷனில் பல படிகள் முன்னேறி மிளிர்கிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

Idli Kadai Release: அஜித்துடன் மோதலை தவிர்த்த தனுஷ்.. 'இட்லி கடை' படத்தின்  புதிய ரிலீஸ் தேதி.!நித்யா மெனனைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? தன்னைப் பெண் கேட்டு வரும் சமுத்திரக்கனியிடம் “இந்தாரு… ஊர்க்காரயங்களுக்கு சாவி கொடுக்கிறது நீதாங்கிறது தெரியும். நான் கட்டுனா முருகனைத் தான் கட்டுவேன். ஒழுங்குமரியாதையா வீட்டைவிட்டுப் போயிரு” என ஆவேசம் காட்டுவது, “ஏன் சாப்பிடாம இருக்கீக” என தனுசிடம் உருகுவது என நித்யா… நீ ரொம்ப கெத்துத்தா.
படத்தில் கெட்டவர்கள் வேண்டும் என்பதற்காக சத்யராஜ், அருண்விஜய் ஆகியோர் உள்ளே வந்திருக்கிறார்கள். தனது தங்கச்சியை உதாசீனப்படுத்திய தனுஷைத் தேடி சங்கராபுரம் கிராமத்திற்கு வந்து அருண்விஜய் வந்து ரவுடித்தனம் பண்ணுவதெல்லாம் நம்பவே முடியவில்லை. ஆனால் இதுக்கு ஒரு டயலாக் வச்சு சமாளிச்சிருக்காரு டைரக்டர் தனுஷ்.

அதே போல் மிகவும் அனுபவசாலி நடிகரான சத்யராஜ், சங்கராபுரம் வந்த பிறகு பல சீன்களில் தடுமாறியிருப்பது நல்லாவே தெரியுது. உலக கோடீஸ்வரய்ங்களே வரும் அளவுக்கு கோடீஸ்வரியான ஷாலினி பாண்டேவுக்கு முருகன் [ தனுஷ்] இல்லேன்னா… ஒரு விக்ரம்கபூரோ, அபய் ஷர்மாவோ, சஞ்சய்சிங்கோ வரப்போறாய்ங்க. ஆனால் முருகன் தான் வேணும்னு ஷாலினி பாண்டே சங்கராபுரம் வந்து காத்துக்கிடக்கும் இடத்தில் தான் படம் கொஞ்சம் ஜெர்க்காகிறது.

இன்ஸ்பெக்டர் அறிவுவுக்கு [ ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ] தனுஷ் மேல் அன்பும் பாசமும் இருப்பது க்ளைமாக்ஸில் தெரிந்தாலும் ஆரம்பத்தில் சாவு [ ராஜ்கிரண் ] வீட்டில் ”பாடியை சீக்கிரமா எடுங்கய்யா” என கரூரில் கொத்துக் கொத்தாக கொலையான பிணங்களைப் பார்த்தது போல் எரிச்சலாகிறார்னுதான் புரியல. கயலைத் தான் கட்டிப்பேன்னு மல்லுக்கு நிற்கும் புரோட்டாக் கடை மாரிச்சாமியாக சமுத்திரக்கனி எப்போதும் முறுக்கிக்கிட்டே திரிகிறார்.

“எஞ்சாமி…” பாடலிலும் பின்னணி இசையிலும் குறிப்பாக கிராமத்தில் அருண் விஜய்க்கும் தனுஷுக்கும் இடையே நடக்கும் ஆக்ரோஷமான சண்டைக் காட்சியில் [ ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர்ஹெய்ன்] பின்னணி இசை பின்னி எடுத்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ்குமார். தனுஷ்-நித்யா மெனன் மெலடியில் ஜி.வி.பிக்கு ‘அரண்மனைக்கிளி’ இசைஞானி பாடல் உதவியிருக்கு.

இட்லி கடை செட், புரோட்டாக் கடை செட், தனுஷ் வீடு, இவற்றை தத்ரூபமாக செட் போட்டு அசத்தியிருக்கார் ஆர்ட் டைரக்டர் ஜாக்கி. சங்கராபுரத்தின் அழகு, கோவில் திருவிழா பிரம்மாண்டம், வாழை இலையில் ஆவி பறக்கும் இட்லி, சுடச்சுட சாம்பார் இதெல்லாம் கேமராமேன் கிரண் கெளசிக்கின் கண்கள் வழியே பளிச்சிடுகிறது.
ஆயிரக்கணக்கான ஊர்ஜனங்களுடன் தனுஷ் பாடும் “எஞ்சாமி…உற்சாகப்பாடலில் கடைசி வரிசையில் ஆடுபவர்களைக் கூட சரியாக கவனித்து அற்புதமாக நடனம் அமைத்திருக்கிறார் சதீஷ் கிருஷ்ணன்.
சொந்த மண், மக்கள், அந்த மக்களின் உண்மையான அன்பு, மனிதம், காதல், குரோதம், என எல்லாமே இருக்கு இந்த ‘இட்லி கடை’யில்.

 

  —  ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.