நயன்தாராவின் ‘ஹாய்'(Hi) ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
ஜி ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் ‘ஹாய்’ (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அக்டோபர் 08- ஆம் தேதி வெளியாகியுள்ளது. படத்தை விஷ்ணு எடவன் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் கதாநாயகனாக கவினும் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் அஸோஸியேட் டைரக்டராக பணியாற்றியவர் விஷ்ணு எடவன்.
படம் குறித்து
இயக்குனர் விஷ்ணு எடவன்,
“ஹாய் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்பக் கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது. படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடந்து வருகிறது. 20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும். இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. அதில் இரண்டு பாடல்கள் முழுமையாக ஷூட்டிங் முடிந்துள்ளது ” என்கிறார்.
தயாரிப்பாளர்கள்:
உமேஷ் குமார் பன்சால்,
நயன்தாரா, விக்னேஷ் சிவன்,
எஸ்.எஸ். லலித் குமார்
இணை தயாரிப்பாளர்கள்:
அக்ஷய் கெஜ்ரிவால் & கே.எஸ். மயில்வாகனன்
தொழில் நுட்பக் கலைஞர்கள் :
இசை – ஜென் மார்ட்டின்
ஒளிப்பதிவாளர் – ராஜேஷ் சுக்லா,
எடிட்டர் – பிலோமின்ராஜ்,
கலை இயக்குனர் – சேகர்,
நடனம் – பிருந்தா,
சண்டைப் பயிற்சி – தினேஷ் காசி,
ஆடை வடிவமைப்பாளர் – காவ்யா ஸ்ரீராம்,
மக்கள் தொடர்பு – யுவராஜ்
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.