அங்குசம் சேனலில் இணைய

அங்குசம் பார்வையில் ‘வேடுவன்’ ( வெப் சீரிஸ்- ஜி5 ஓடிடி)  

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு: ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி பெண்ட்லா, டைரக்டர்: பவன், ஆர்டிஸ்ட்: கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், வினுஷா தேவி, லாவண்யா, ரேகா நாயர், ஜீவா ரவி, ஒளிப்பதிவு: ஸ்ரீனிவாசன் தேவராஜ், இசை: விபின் ராஜ், எடிட்டிங்: சுராஜ், பி.ஆர்.ஓ: சதீஷ் ( எய்ம்) சினிமா ஹீரோ சூரஜ்ஜுக்கு வரிசையாக நாலு படங்கள் ஃப்ளாப் ஆன டென்ஷனில் இருக்கும் போது, புது டைரக்டர் ஒருவர் கதை சொல்ல வருகிறார். அருண்மொழி வர்மன் என்ற என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான போலீஸ் அதிகாரி ஒருவரின் நிஜக் கதை இது. டிபார்ட்மெண்ட் கொடுத்த அண்டர் கவர் ஆபரேஷன் படி சென்னையில் பிரபல ரவுடியை மூன்று மாதங்கள் பிச்சைக்காரன் வேடத்தில் கண்காணித்து போட்டுத் தள்ளுகிறார்.

வேடுவன்அடுத்து சிவகங்கை மாவட்டம் மருதுபாண்டிபுரத்தில் பல கொலைகளைச் செய்துவிட்டு ஊருக்குள் நல்லவனாகஇருக்கும் ஆதிநாதனை( சஞ்சீவ் வெங்கட்) போட்டுத் தள்ள அசைன்மெண்ட் கொடுக்கிறார் கமிஷனர். அதன்படி அந்த ஊருக்கு வந்து புரோட்டா மாஸ்டராக வேலை பார்க்கிறார். ஆதியையும் கண்காணிக்கிறார். இந்த நேரத்தில் தான் அதே ஊரில் உள்ள தனது கல்லூரிக் காலத்து காதலியை ( வினுஷா தேவி)சந்திக்கிறார். காதலியின் இப்போதைய கணவன் தான் ஆதி நாதன் என்பதை அறிந்து அதிர்ச்சியாகி யார். மாஜி காதலியின் கணவனை அருண் மொழி என்கவுண்டர் பண்ணினாரா? என்பதை ஆறு எபிசோட்களில்(இரண்டரை மணி நேரம்) விறுவிறுப்பாக சொல்லியுள்ளார் டைரக்டர் பவன்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

வேடுவன்சூரஜ் என்ற நடிகன் போலீஸ் அதிகாரியான பின்னர் உடல் மொழியில் வித்தியாசம் காட்டியிருந்தாலும் பல சீன்களில் அதிக அளவில் உணர்ச்சிவசப்பட்டுள்ளார் கண்ணா ரவி. க்ளைமாக்ஸ் சீன் ஷூட் பண்ணும் போது திடீரென ஒரு மாற்றம் ஏற்பட்டு உண்மையான போலீஸ் அதிகாரி தற்கொலை பண்ணியிருக்க வாய்ப்பே இல்லை என கரெக்டா ஸ்மெல் பண்ணி அதற்கு விடை தேடி களத்தில் இறங்கிய பிறகு கடைசி இரண்டு எபிசோடுகள் செம ட்விஸ்ட் & த்ரில்லிங். வெல்டன் டைரக்டர் பவன்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

வேடுவன்கண்ணா ரவியின் காதலியாக ஸ்ரவ்னிதா ஸ்ரீகாந்தை விட போலீஸ் அதிகாரி கண்ணா ரவியின் மனைவியாக வரும் லாவண்யா தான் கவனம் ஈர்க்கிறார். இவர்கள் இருவரையும் விட சஞ்சீவ் வெங்கட்டின் மனைவியாக வரும் வினுஷா தேவி தான் டாப். சீனியர் நடிகைகள் அர்ச்சனாவையும் ஈஸ்வரி ராவ்வையும் மிக்ஸ் பண்ணியது மாதிரி அதே கருப்பழகியாக நடிப்பிலும் அசத்தியுள்ளார். சஞ்சீவ் வெங்கட்டுக்கு தாதா கெட்டப் ஓரளவு தான் மேட்ச் ஆகுது. புரோட்டாக் கடையில் கண்ணா ரவியை பார்க்கும் முதல் சீனிலேயே சஞ்சீவ் ஏன் முறைக்கிறார்னு தெரியல. அதேபோல் வினுஷா தேவி தான் சஞ்சீவ் மனைவியாக இருக்கணும் என பார்வையாளன் ஈஸியாக ஊகிக்க முடிகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சஞ்சீவ் வெங்கட்டின் அடியாள் கருப்பு கேரக்டரில் வரும் நடிகர் சினிமாவில் முயற்சித்தால் பளிச்சிடுவார். விபின் பாஸ்கர் பின்னணி இசை வேடுவனுக்கு பக்கபலமாக இருக்கிறது. கேமரா மேன் ஸ்ரீனிவாசன் தேவராஜ் மருதுபாண்டியபுரத்தை பல கோணங்களில் அள்ளி வந்து விருந்து வைத்திருக்கிறார்.   *வேடுவன்* நல்ல கண்டெண்டுடன் ரசிக்க வைக்கிறான்.

 

   —    ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.