முதல்வர் மீது அவதூறு பதிவு! பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
விருதுநகர் மாவட்டம் பெரியமருளுத்தை சேர்ந்த பாஜக தெற்கு ஒன்றிய செயலாளர் கோபி தனது முகநூல் (Facebook) பக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை குறிவைத்து அவதூறான பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், முதல்வர் உருவப் பொம்மை எரிக்கும் புகைப்படத்துடன் “முதல்வரே மத்திய பிரதேசம் போகாதீங்க, அங்கே உங்களை எரிச்சிருவாங்க தலைவரே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இச்சம்பவம் குறித்து திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், கோபி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் பாஜக நிர்வாகி கோபி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.