அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அனைத்து தரப்பின் ஆதரவு பெறுவோம் ஆனால் அமைச்சரவையில் பங்கில்லை ! கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டியில் புதிய தமிழகம் கட்சியின் 7ஆம் மாநில மாநாட்டுக்கு பின் மாவட்டந்தோறும் நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். தமிழகத்தில் 22 மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சிக்கு கனிசமான வாக்குகள் உள்ளன. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் பொருட்களை வாங்க கூடாது என ட்ரம்ப் உத்தரவிட்டார். அமெரிக்காவில் இருந்து 500 மில்லியன் டாலர் மத்திப்பில்லான பொருட்களை இந்தியா வாங்கவும் அதே நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல், டீசல் வாங்க கூடாது எனவும் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் வேளாண் உள்ளிட்ட  அனைத்து தொழில்களும் பாதிப்படையும் அமெரிக்காவின் உத்தரவுக்கு ஏன் இந்தியா அடிபணிகிறது என தெரியவில்லை.

மாஞ்சோலை தொழிலாளர்களை திமுக அரசு விரட்டி அடிக்கிறது. இதுதான் திராவிடமாடல் அரசின் சாதனையா? இது தான் முதல்வரின் சமூக நீதியா? மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு குடிநீர், மின்சாரம், பேருந்துவசதி, ரேசன் பொருட்களை வழங்கவில்லை. மாஞ்சோலையில் தொழிலாளர்கள் குடியிருக்கவில்லை தமிழக அரசு நீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்துள்ளது. மாஞ்சோலை தொழிலாளர்கள் மலையை விட்டு இறங்க தமிழக அரசு நிர்பந்தம் செய்கிறது. மாஞ்சோலையின் தற்போதைய நிலை குறித்து விசாரணை செய்ய வழக்கறிஞர் ஆணையம் அமைக்க நீதிமன்றத்தில் முறையீட உள்ளோம் 10 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளவர்கள் குழு அமைத்துவிட்டு 36 நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

திமுக அரசிற்கு மாற்றாக புதிய அரசு அமைய வேண்டும் என விரும்புகிறோம். புதிதாகய அமையக்கூடிய அரசு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வலுவான அரசாக அமைய வேண்டும் 2026 ல் ஒரு கட்சி மட்டுமே ஆட்சியில் அமரக்கூடாது என நினைக்கிறோம். ஒரு கட்சி மட்டுமே ஆட்சி புரிவதால் அடித்தட்டு மக்களின் நிலை தெரியாமலே போகிறது. அமைச்சரவையில் பங்கேற்றால்தான் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

பின்னர் வெளியில் இருந்து ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி என்ன பயன் கிடைக்கும் கூட்டணி ஆட்சி இல்லை என்றால் அந்த ஆட்சி தமிழக மக்களின் நல்வாழ்வுக்கான ஆட்சியாக இருக்காது. கூட்டணி ஆட்சி அமைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளை பெறுவோம். ஆனால் அமைச்சரவையில் பங்கில்லை என்றால் எப்படி? இந்த முறை காலனி ஆதிக்கம் மாதிரிதானே இருக்கு, ஜனநாயக நாடு என எப்படி சொல்ல முடியும் எதற்கு தேர்தல் நடத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸில் இட ஒதுக்கீடு கொடுத்துவிட்டு அமைச்சரவையில் பங்கில்லை என செல்கிறார்கள். கூட்டணி அரசாக இருந்தால்தான் அது மக்களுக்கான அரசாக இருக்கும். புதிய தமிழகம் கட்சி யாருடன் பேச்சுவார்த்தை செய்கிறது என பொது வெளியில் சொல்ல விரும்பவில்லை. 2026 ல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க வேண்டும் என்பதை வைத்து தேர்தல் பணியாற்றி வருகிறோம். கூட்டணி அரசு வலுவான கூட்டணிஆட்சி மாற்றம் இதை மையப்படுத்தியே புதிய தமிழக கட்சி செயலாற்றி வருகிறது என கூறினார்.

யாவரும் கேளீர்

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.