கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் : 139-வது கிளையை திறந்து வைத்த எம்.பி. !
1903 ஆம் ஆண்டு ராவ் பகதூர் என்.கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் மற்றும் கும்பகோணத்தின் முக்கிய பிரமுகர்களால் துவங்கப்பட்ட நிதி நிறுவனம், கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட். தஞ்சாவூர் திருச்சி – தேசிய நெடுஞ்சாலை சானூரப்பட்டியில், செங்கிப்பட்டி பொன்.க.ஸ்டாலின் வணிக வளாகத்தில் அமையப்பெற்ற 139-வது கிளையை அக்-10 அன்று பரஸ்பர ஸகாய நிதியின் தலைவர் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி. திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், முரசொலி எம்.பி., பூதலூர் சேர்மன் கல்லணை செல்லக்கண்ணு, ஒன்றிய செயலாளர்கள் சு.முருகானந்தம், எம்.அசோக், அம்மாபேட்டை சேர்மன் கே.வி.கலைச்செல்வன், பொன்.க.லெனின், பொன்.க.செழியன், ஒரத்தூர் பன்னீர் செல்வம், சானூரப்பட்டி சரவணன், வெண்டயம்பட்டி ஜெயக்குமார், கூனம்பட்டி பாஸ்கர், பழிநிராசு மற்றும் இயக்குநர்கள் பிரகாசம், அம்பிகா, துரைராஜ், குருபிரசாத் ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள். கிளைமேலாளர் அன்பழகன் தலைமையில் அலுவலர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.
— தஞ்சை க.நடராசன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.