தீபாவளிக்கு பட்டாசு போட்றியா? நாங்க யாரு தெரியுமா?
தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மதுரை பொன்மேனி பகுதியில் முதல் தெருவில் உள்ள பொதுமக்கள் தீபாவளி அன்று இரவில் பட்டாசு வெடித்து கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது, மதுபோதையில் வந்த திமுகவை சேர்ந்த 68-வது வார்டு பொறுப்பாளர் பாலு மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர் பொன்முனியாண்டி ஆகிய இருவரும் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டு இருந்த பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால், பேசி கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திமுகவை சேர்ந்த பிரமுகர்கள் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் திமுக பிரமுகர்கள் பாலு மற்றும் பொன்முனியாண்டி இருவரும் தகாத வார்த்தையால் பேசியதோடு SS காலனி போலீஸ் எங்களை ஒன்றும் பண்ண முடியாது என சிலரை தாக்குதல் நடத்தி காலில் விழ சொல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளான பொன்மேனி முதல் தெரு பொதுமக்கள் எஸ் எஸ் காலனியில், புகார் அளித்தும் திமுக பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தகவல் தெரிவிக்கின்றனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்









Comments are closed, but trackbacks and pingbacks are open.