அறுவடைக்கு காத்திருந்த வேளையில் அடைமழையால் நேர்ந்த சோகம் !
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் வடகிழக்கு பருவ மழையில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்வயல்களிலும் மழைநீர் சூழ்ந்தது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், தென்னங்குடி, சித்திரக்குடி ஆகிய கிராமங்களில் அக்-22 அன்று பாரதிய ஜனதாகட்சியின் மாநில விவசாய அணித் துணைத் தலைவர் ராஜாராம் தலைமையில், மாவட்ட விவசாய அணித் தலைவர் துரை.சம்பத், தஞ்சாவூர் மாவட்ட விவசாய அணி பொதுச்செயலர் ஆற்காடு செந்தில், மாவட்ட செயலர் சாய்.கே.ஃபால சுப்பிரமணியன், பூதலூர் (வ) ஒன்றிய தலைவர் சந்திரமோகன், பூதலூர் தெற்கு ஒன்றியத் தலைவர் சி.குமார், மாவட்ட மகளிர் அணி பொருளாளர் மகேஷ்வரி ஆகியோர் பார்வையிட்டனர். இவர்களுடன் கோவிலடி ராஜகோபால், ஒன்றிய தலைவர் ராஜ முருகானந்தன் குணசேகரன் ஆகியோரும் சென்றனர்.
— தஞ்சை க.நடராசன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.