அங்குசம் சேனலில் இணைய

கிஸ் சீனுக்கு “நோ” சொன்ன ஹீரோயின்!- ‘ஆர்யன்’ சீக்ரெட்!

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர்  பிரவீன் கே. இயக்கத்தில்,  முன்னணி நடிகர் விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா செளத்ரி, கருணாகரன் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடித்துள்ள படம் ‘ஆர்யன்’.  வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாவதால் படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் அக்டோபர் 21- ஆம் தேதி மாலை  கோலாகல மாக நடந்தது.

இவ்விழாவினில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் சிங்கிள் பாடல் பத்திரிகையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் படம் குறித்த பல தகவல்களை ஊடகத்திடம்பகிர்ந்து கொண்டனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இதில் பேசியவர்கள்……

ஆர்யனின் எழுத்தாளர் இயக்குநர்  மனு ஆனந்த்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“எனக்கு எப்படி எஃப்.ஐ.ஆர் எவ்வளவு முக்கியமான படமோ,  அதே போல் ஆர்யன் முக்கியமான படம்.  விஷ்ணு விஷால் என் முதல் ஹீரோ. இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவும்  அவர்தான். பிரவீனும் நானும் கௌதம் மேனனிடம் ஒரே நாளில் வேலைக்கு சேர்ந்தோம். சினிமாவை ஒன்றாக விவாதிப்போம். விஷ்ணு விஷால் கதை கேட்ட போது நான் தான் பிரவீனை சிபாரிசு செய்தேன். இந்தக் கதையை திரைக்கதையாக எழுத பிரவீன் அணுகிய போது மகிழ்ச்சியாக இருந்தது. மிக நல்ல திரைக்கதை. படம் பார்க்கும் போது பிரவீனின் திறமை உங்களுக்கு புரியும். எஃப்.ஐ.ஆர் படத்தை பலர் தவிர்த்த போது துணிந்து நடித்து தயாரித்தவர் விஷ்ணு விஷால். அவர் இந்தப் படத்தையும் நம்பி தயாரித்துள்ளார். போலீசாக கலக்கியிருக்கிறார். செல்வா சார் இப்படத்தில் மிரட்டியிருக்கிறார். ஷ்ரத்தாவும் சிறப்பாக செய்துள்ளார். ஜிப்ரான் சார் அருமையான இசையைத் தந்துள்ளார். எல்லோரும் திரையரங்கில் பாருங்கள், உங்களுக்கு இப்படம் நல்ல அனுபவமாக இருக்கும்”.

கலை இயக்குநர் ஜெயச்சந்திரன்

இந்தப்படத்தில் மிக முக்கியமான சீக்குவென்ஸ்க்காக ஒரு பெரிய செட் போட்டுள்ளோம்”.

எடிட்டர் ஷான் லோகேஷ்

“ஆர்யன் மிக முக்கியமான படம். இதுவரை வந்த க்ரைம் சைக்கோ கில்லர் படங்களின் வழக்கத்தையே உடைத்து, புதிதாக ஒன்றை செய்துள்ளது.  விஷ்ணு சாரின் அர்ப்பணிப்பு பிரமிப்பாக இருந்தது. அவர் பணத்தை பற்றி எப்போதும்  கவலைப்பட மாட்டார். படம் சரியாக வர வேண்டும் என்பதில் கறாராக இருப்பார். சினிமாவை உண்மையாக காதலிக்கும் ஒருவர்”..

மானசா சௌத்திரி
மானசா சௌத்திரி

இசையமைப்பாளர் ஜிப்ரான்

“எல்லோரிட மிருந்தும் ராட்சசன் மாதிரி இந்தப் படம் இருக்குமா என்ற கேள்வி வந்துகொண்டே இருக்கிறது. ராட்சசன் எனக்கு முக்கியமான படம். ராட்சசனில் வில்லன் யார் என்பது தான் முக்கிய கேள்வியாக இருக்கும். அது இசையில் சவாலாக இருந்தது. இதில் வில்லன் யார் எனத் தெரிந்து விடும், ஆனால் அதன் பிறகு தான் கதை தொடங்கும். மியூசிக் நன்றாக தெரியக் காரணம் எடிட்டர் ஷான் தான். எடிட்டிங்கில் இசைக்கு நன்றாக இடம் கொடுப்பார். ரொம்ப கடினமான திரைக்கதையை மிக அழகாக சொல்லியுள்ளார் பிரவீன். வாய்ப்புத் தந்த விஷ்ணு விஷால் சாருக்கு நன்றி. இந்தப்படத்துக்கு ஒரு சவுண்ட் செய்துள்ளேன். அது ராட்சசனில் இருந்து முற்றிலும் வேறு விதமாக இருக்கும். இப்படம் ஒரு முழுமையான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும்”.

நடிகர் கருணாகரன்

“ஆர்யன் எனக்கு பிடித்த படம். பிரவீன் ரொம்ப காம்ப்ளிகேடட் கதையை பிரில்லியண்டாக எடுத்துள்ளார். விஷ்ணு விஷால் போலீஸ் கதாப்பாத்திரத்தை மிக அட்டகாசமாக செய்துள்ளார். அவர் கடினமான உழைப்பாளி. தயாரிப்பது எவ்வளவு கடினம் என்பதை விஷ்ணுவுடன் இருந்து பார்த்தேன்”.

மானசா சௌத்திரி

“ஆர்யன் எனக்கு மிக முக்கியமான படம்.  பிரவீன் சார் எனக்கு நல்ல ரோல் தந்ததற்கு நன்றி. விஷ்ணு விஷால் சாரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன்”.

 ஷ்ரத்தா ஶ்ரீநாத்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

“என் தயாரிப்பாளர்  விஷ்ணு விஷால் சாருக்கு முதல் நன்றி. அவரை தயாரிப்பாளராகத்தான் முதலில் சந்தித்தேன். அவர் கடுமையானஉழைப்பைப் போட்டு இந்தப்படத்தை எடுத்துள்ளார். அவர் தந்த ஊக்கத்திற்கும் என்னை தேர்ந்தெடுத்ததிற்கும் நன்றி. அவருடன் நடித்தது மிக மகிழ்ச்சி.

 ஷ்ரத்தா ஶ்ரீநாத்
ஷ்ரத்தா ஶ்ரீநாத்

பிரவீன் அற்புதமான கதை சொல்லி. படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார்.இது ஒரு க்ரைம் ஸ்டோரி.  உங்களுடன் நானும் இப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்”.

இயக்குநர் பிரவீன் கே

“இந்தப்படத்தின் எழுத்தாளர் மனு ஆனந்திற்கு நன்றி.  ‘எஃப் ஐ ஆர்’ படப்பிடிப்பின் போது உருவான கதை இது. எந்த ஒரு இயக்குநருக்கும் முழுதாக புரிந்து கொண்ட ஒரு நடிகன் கிடைப்பது வரம். எனக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் விஷ்ணு விஷால் கிடைத்தது வரம். இந்தப்படத்தின் கதை கேட்ட தருணத்திலிருந்து அவர் இந்த கேரக்டரை, படத்தை எடுத்துச் சென்ற விதம் பிரமிப்பானது. பல தடைகள் வந்த போதும் அவர் இப்படத்தை தாங்கினார். இதற்காக அவர் தந்த உழைப்பு மிகப்பெரியது. இந்தப்படத்தை முழுதாக வேறுமாதிரி அணுகியிருக்கிறோம். இந்தப்படத்தின் மிகப்பெரிய பிளஸ்  தொழில்நுட்ப கலைஞர்கள் தான்.மிக திறமையானவர்களை தேர்ந்தெடுத்தேன், அவர்கள் அற்புதமான உழைப்பை தந்துள்ளனர். ஜிப்ரான், ஷான், ஹரீஷ், ஜெயச்சந்திரன் என எல்லோரும் அட்டகாசமாக செய்துள்ளனர். எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி. படம் உங்களுக்கு சிறப்பான அனுபவம் தரும்”.

இயக்குநர் செல்வராகவன்

“விஷ்ணு விஷால் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவரைச் சந்தித்ததில்லை. அவர் என்னை சந்தித்து, படம் செய்ய வேண்டும் என அணுகி, அவருடன் வேலை பார்த்த போது தான் அவரை பார்த்து பிரமித்தேன். அவர் வீட்டுக்கே போக மாட்டார். எப்போதும் சினிமா தான். சினிமாவை காதிலிக்கிற நேசிக்கிற, மதிக்கிற, ஹீரோ. அதே போல் இயக்குநர் பிரவீன், அவரும் அப்படித் தான். உங்களின் நேசிப்புக்கு நல்லதே நடக்கும்”.

விஷ்ணு விஷால்

“எனக்கு இந்த இடம் கிடைக்க காரணம் பத்திரிகை நண்பர்கள் தான். க்ரைம் படம் என்றாலே கண்டிப்பாக ராட்சசனுடன் கம்பேர் செய்வார்கள் ,அதை தடுக்க முடியாது. எல்லா மொழியிலும் த்ரில்லர் வந்தால் ராட்சசன் படத்தோடு ஒப்பிடுவார்கள். நானே ராட்சசனை மீறி படம் செய்ய முடியாது என நினைத்தேன். அதை மீற முடியாது. ஆனால் நாங்கள் வேறொரு அனுபவம் தர முயற்சி செய்துள் ளோம். கோவிட் சமயம் ஆரம்பித்த படம் இது. ஐந்து வருடம் ஒரு படத்திற்காக பிரவீன் உழைத்துள்ளார். இந்தப்படத்தின் இந்தி வெர்ஷனில் அமீர்கான் சார் நடிப்பதாக இருந்தது. அவரே கதை கேட்டு பாராட்டிய போது, எங்களுக்கு பெரிய உற்சாகம் வந்தது. ஆனால் இந்தப்படத்தை தமிழிலேயே எடுப்போம் என முடிவு செய்தேன். பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது. ரூட்டடாக எடுத்த படங்கள் தான் பான் இந்திய படமாக மாறியுள்ளது. அதனால் தமிழ் ஆடியன்ஸுக்கு எடுக்கலாம் என எடுத்துள்ளோம்.

மகன் ஆர்யனுடன் விஷ்ணு விஷால்
மகன் ஆர்யனுடன் விஷ்ணு விஷால்

இப்படத்தில் எனக்காக எல்லோரும் உழைத்துள்ளார்கள். தொழில் நுட்பக் கலைஞர்கள்  200 சதவீத உழைப்பை தந்துள்ளனர். என் மனைவி ஜுவாலாவிற்கு நன்றி. ஒரு புது விஷயம் முயற்சி செய்துள்ளோம். நீங்கள் தரும் பாராட்டுக்கள் தான் எனக்கு புது விஷயங்கள் செய்ய ஊக்கமாக உள்ளது. இந்தப்படம் பொறுத்த வரை செல்வா சார் தான் ஹைலைட். இப்படத்தில் நடித்தற்கு நன்றி சார்.  தனுஷ் இவ்வளவு பெரிய நடிகராக,  உங்கள் உழைப்பும் ஒரு காரணம். இப்படத்தில் நடித்ததற்கு நன்றி.  எனக்கும் பிரவீனுக்கும் படத்தில் வரும் இந்த ரோலுக்கு ஷ்ரத்தா  தான் மனதில் வந்தார். படத்தின் முதல் 30 நிமிடம் அவர் தான் தாங்கியுள்ளார். மானசா லேட்டாக வந்தார், சிறப்பாக செய்துள்ளார். எல்லாப்படத்திலும் முத்தக்காட்சியில் நடிக்கிறேன் இதில் வேண்டாம் என்றார். அதை ஏற்று ஒரு பாடல் செய்தோம் சிறப்பாக வந்துள்ளது. கருணாகரன் என் புரொடக் சனில் ஒரு பார்ட்னராகடாக ஆகிவிட்டார். ஆர்யன் என் மகனின் பேர். அவர் பேரில் நல்ல படம் தந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன்”.

விஷ்ணு விஷால் மகன்  “ஆர்யன்“

“என்னுடைய அப்பா என் பெயரில் படமெடுத்துள்ளார். என் பெயரில் படம் வருவது எனக்கு பெருமையாக உள்ளது”.

நடிகர் விஷ்ணு விஷால், ‘ராட்சசன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் ‘ஆர்யனி’ ல் போலீஸ் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன்  மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து  நடித்துள்ளனர்.

புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லராக  இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்  பிரவீன்  கே.  விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்தப படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

*மக்கள் தொடர்பு*   சதீஷ் (AIM)

 

—    ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.