அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இரிடியம் மோசடி ! இத்தனை காலம் சிக்காமல் தப்பியது எப்படி ?

திருச்சியில் அடகு நகையை விற்க

 

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக … என்பதாக டைட்டில் கார்டு போடும் அளவுக்கு, அதிரடி வேட்டையை நடத்தியிருக்கிறார்கள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு (சிபிசிஐடி) போலீசார்.  தமிழகத்தில் கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக, கோலோச்சிவரும் இரிடியம் தொடர்பான மோசடி விவகாரத்தில்தான் இந்த அதிரடி பாய்ந்திருக்கிறது.

ஏற்றுமதி செய்கிறோம். வெளிநாட்டு டிரஸ்டுகளில் இருந்து பணம் வந்திருக்கிறது… அதனை பெறுவதற்கு வங்கி கணக்குகள் தேவை… எஸ்.பி.ஐ. வங்கியில், ஆர்.பி.ஐ.இல் கோடி கணக்கான ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது… என்பதாக, பல்வேறு விதங்களில் இந்த மோசடியை அரங்கேற்றியிருக்கிறார்கள். உச்சக்கட்டமாக, இவர்களது மோசடிக்கு ஆர்.பி.ஐ.யையும் துணைக்கு இழுத்திருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை. இந்த விவகாரத்தை ஆர்.பி.ஐ. தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்திருந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் தாமாக முன்வந்து இந்த அதிரடியை நடத்தியிருக்கிறார்கள்.

https://www.livyashree.com/

இந்த விவகாரத்தில், சேலம் சிபிசிஐடி போலீசார் பிள்ளையார்சுழியை போட்டு முதல் வழக்கை பதிவு செய்து 13 பேரை கைது செய்தார்கள். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து 20-க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.

இரிடியம் பிசினஸ்
இரிடியம் பிசினஸ்

கடந்த செப்-12 ஆம் தேதியன்று மட்டும் தமிழகத்தின் 43 இடங்களிலும் வெளிமாநிலங்களில் 4 இடங்களிலும் அதிரடி ரெய்டு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். 10 டி.எஸ்.பி.க்கள், 35 இன்ஸ்பெக்டர்கள் 12 சார்பு ஆய்வாளர்கள் அடங்கிய போலீசார் நடத்திய இந்த அதிரடி நடவடிக்கையில் இதுவரை 54 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரது வீடுகளிலும் சோதனைகளயும் நடத்தி முடித்திருக்கிறார்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மிக முக்கியமாக, இந்த விவகாரத்தில் 5 மோசடி கும்பல்களின் தலைவர்களை அடையாளம் கண்டு தட்டித் தூக்கியிருக்கிறார்கள். சென்னை சுவாமிநாதன், காட்பாடி ஜெயராஜ், குடுமியான்மலை ரவிச்சந்திரன், மணப்பாறை ஞானப்பிரகாசம், திண்டுக்கல் டெய்சிராணி ஆகிய ஐந்து பேரும் தங்களுக்கு கீழாக ஒரு வலைபின்னலை உருவாக்கிக் கொண்டு இரிடியம் தொடர்பான மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இடைப்பட்ட இருபது ஆண்டு காலத்தில், இதே 5 கும்பல்களின் தலைவர்கள் உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் குறிப்பாக, மாவட்ட / மாநகர குற்றப்பிரிவு மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசு நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் விசாரணைகளும் நடந்திருக்கின்றன. ஆனாலும், குற்றவாளிகள் தொடர்ந்து தப்பி வந்திருக்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகள் இவர்கள்  யாருடைய பிடியிலும் சிக்காமல், தங்களது கைவரிசையை தொடர்ந்தது எப்படி? இவர்களுக்கு ஆதரவாக யாரெல்லாம் போலீசு ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசியிருக்கிறார்கள்? சில இடங்களில், முன்னாள் போலீசார்கள் சிலர் தலையிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்தெல்லாம் சிபிசிஐடி போலீசார் விரிவான விசாரணையை முடுக்கிவிட வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாகவும் அமைந்திருக்கிறது.

டி.எஸ்.பி. வினோத்
டி.எஸ்.பி. வினோத்

”இத்தனை ஆண்டுகாலம் இந்த மோசடி தொடர்ந்ததற்கு அடிப்படை காரணமே, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து புகார் வராததுதான் என்கிறார்கள். எங்கே புகார் அளித்தால், போலீசாரின் நடவடிக்கை தங்களது பக்கமும் திரும்பிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே, பலர் புகாருக்கே வருவதில்லை. அப்படி வந்தாலும், பேசி செட்டில்மெண்ட் செய்து வழக்கை முடித்து கொள்ளவே முயற்சிக்கிறார்கள். இன்னும் பலர், போலீசில் புகார் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டியே, பணத்தை திரும்ப பெறுவதற்கான உத்தியாகவே கையாண்டிருக்கிறார்கள்.” என்பதாக போலீசு தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய பின்னணியில்தான், தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையையும் முடிக்கி விட்டிருக்கிறது, சிபிசிஐடி போலீசு. மேலும், இரிடியம் தொடர்பான வழக்குகளை கையாளுவதற்கென்றே, சிபிசிஐடி போலீசார் தரப்பில், சிறப்பு அதிகாரியாக சேலம் சரக சிபிசிஐடி டி.எஸ்.பி. வினோத் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேற்படி கும்பல்களிடம் பணத்தை இழந்தவர்கள் யாராக இருந்தாலும், நேரடியாக சிபிசிஐடி போலீசில் புகார் அளிக்கலாம் என்பதாக தெரிவிக்கிறார்கள். மோசடி நபர்கள் குறித்து தங்களுக்கு தெரிந்த தகவல்களை போலீசாரிடம் வழங்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் தனிப்பட்ட இரகசியங்கள் காக்கப்படும் என்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

 —    அங்குசம் புலனாய்வுக் குழு

 

புகார் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு அணுக :

இந்த வழக்கின் சிறப்பு அதிகாரி : டி.எஸ்.பி. வினோத்

அவரது கைப்பேசி மற்றும் வாட்சப் எண் :  94982 10147

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.