அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கலைமகள் சபா வழக்கில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்துவரும் கலைமகள் சபா விவகாரத்தில், முதற்கட்டமாக கோயம்புத்தூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலைமகள் சபாவுக்கு சொந்தமான நிலங்களை சோதனை முயற்சியின் அடிப்படையில் பொது ஏலத்தில் விற்று பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நிவாரணத்தை வழங்கும் முயற்சியை சென்னை உயர்நீதிமன்றம் முன்னெடுத்து வந்த நிலையில், ஏற்கெனவே ஒரு முறை ஏலத்துக்கான அவகாசத்தை நீட்டித்த நிலையிலும் 259 பேர் பார்வையிட்டும் இதுவரையில் ஒருவர் கூட ஏலத்தில் பங்கேற்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரத்தில், கலைமகள் சபையின் சிறப்பு அதிகாரி ஆலிவர் பொன்ராஜ் ஐ.ஏ.எஸ். மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான ஒரு நபர் ஆணையர் ஆகிய இருவரும் தங்களது ஆலோசனையை நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.
இதற்கிடையில், கலைமகள் சபாவின் ஊழியர்கள் சசி குமார் மற்றும் ஹேமலதா ஆகியோர் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக கூறி பல்வேறு விதமான மோசடிகளில் ஈடுபட்டது அம்பலமான நிலையில், இந்த மோசடி தொடர்பாகவும் விரிவான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இதுஒருபுறமிருக்க, கலைமகள் சபாவின் சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாக மண்டல அளவிலான மேலாளர்களை நியமித்து உத்தரவு வெளியாகியிருக்கிறது.
1. வேலூர் – ஏ.சி. விநாயகமூர்த்தி (ஓய்வு பெற்ற தாசில்தார்) – 9003368441
2. கிருஷ்ணகிரி – ஜி.சரவணபவன் (ஓய்வு பெற்ற தாசில்தார்) – 9443631977
3. திருநெல்வேலி – எஸ்.பாலசுப்ரமணியன் (ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.) – 7598673214
4. பெங்களூர் – எம்.ஜெயகாந்தன் – 9845061416
5. புதுக்கோட்டை – வி.மாணிக்கம் – (ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.) – 9788783054
6. தஞ்சாவூர் – ஆர்.குருமூர்த்தி – 9442547682
7. கோயம்புத்தூர் – வி.சிதம்பரம் – 9791948504
8. மதுரை – சி.ரபி ரஞ்சித்குமார் – 7874304545
9. திண்டிவனம் – எஸ்.குமார் – 9585920989
10. விருதுநகர் – எஸ்.கோமதிநாதன் (ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.) – 9940840446
11. டியூக் பொன்னுராஜ் (ஓய்வு பெற்ற உதவி ஆட்சியர்) 9443463600
12. புதுக்கோட்டை – ஜி.ராமகிருஷ்ணன் (ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளர்) – 9865083807
13. இராமநாதபுரம் – பி.கார்த்திகேயன் (ஓய்வு பெற்ற டெபுடி கலெக்டர்) – 9442451621
14. சேலம் – கே.தமிழரசி – 9942329835
ஏலத்தை எப்படி நடத்துவது? பல்வேறு வகையிலான நடைமுறை சிக்கலை சந்தித்துவரும் கலைமகள் சபாவுக்கு சொந்தமான நிலங்களை எப்படி கையகப்படுத்துவது? பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு எந்த வகையில் நிவாரணத்தைக் கொடுப்பது? என்பதெல்லாம் விடை காண முடியாத கேள்விகளாகவே இன்னும் நீடித்து வருவதுதான் இந்த வழக்கின் பெரும் சாபக்கேடு! பார்ப்போம் என்னதான் நடக்கிறதென்று?

HARINI JEWELLERS TRICHY

– அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.