கலைமகள் சபா : சாபம் விடுவதால், சிக்கல் தீருமா ?!

கலைமகள் சபா – 08

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கலைமகள் சபா உறுப்பினர்கள் மத்தியில், ஒத்த கருத்து, ஒத்த புரிதல், ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பதும்; தற்போதைய கலைமகள் சபா நிர்வாகத்தினர் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற அடிப்படை விவரங்கள்கூட உறுப்பினர்களிடம் சென்று சேராததும்தான் கலைமகள் சபா தற்போது எதிர்கொள்ளும் மையமான சிக்கலாக நீடிக்கிறது என்பதை முந்தைய பதிவில் விரிவாக பதிவு செய்திருந்தோம்.

கலைமகள் சபா உறுப்பினர்களை பொறுத்தவரையில், “எங்களுடைய சொத்தை பல ஆண்டுகளாக பறித்து வைத்துக்கொண்டு, எங்களுக்கு பிரித்துக் கொடுக்காமல் அதிகாரிகளே ஆண்டு வருகிறார்கள்.”

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

“வங்கிக்கணக்கில் இருக்கும் கோடிக்கணக்கிலான ரூபாய்களை சம்பளம் என்ற பெயரில் அனுபவித்து வருகிறார்கள்.”

“ஜான் வாங்கிப்போட்ட சொத்துக்களை இப்போது பங்கிட்டாலும், தலைக்கு 2 கிரவுண்ட் இடம் இருக்கும்”

“நாங்கள் அன்று கட்டிய சொற்ப பணத்தை வங்கியில் போட்டுவிட்டு, இருக்கும் சொத்துக்களையெல்லாம் அபகரிக்க திட்டம் போடுகிறார்கள்.”

“கலைமகள் சபாவின் பைலா படி, நிலமாகத்தான் பிரித்துக் கொடுக்க வேண்டும். பணமாக கொடுக்க சொல்லி இவர்களிடம் யார் கேட்டது?”

“கலைமகள் சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை முதலில் 5 இலட்சம் என்றார்கள். இப்போது, 6 இலட்சம் என்கிறார்கள். ஏதோ செய்கிறார்கள்.”

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

“கலைமகள் சபாவின் சொத்துக்களும் அதன் அலுவலகமும் கலைமகள் சபாவின் உறுப்பினர்களுக்கே பாத்தியப்பட்டது. அலுவலகத்தில் கலைமகள் சபாவின் உறுப்பினர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். மற்றவர்களை வெளியேற்ற வேண்டும்.”

… இன்னும் இதுபோன்ற பல கொந்தளிப்பான கருத்துகளை குறிப்பாக கலைமகள் சபாவின் மூத்த உறுப்பினர்களே பகிர்ந்து வருகிறார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு தீர்வை நோக்கி நகராமல் தேங்கிய நிலையில் நீதிமன்ற வழக்கு விவகாரத்துக்குள் சிக்கி இருப்பதன் காரணமாக ஏற்பட்ட வெறுப்பிலிருந்து அவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்பதாக மட்டும் இதனை கடந்து சென்றுவிட முடியாது.

என்னதான் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் என்றாலும், விவகாரம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கான முயற்சியில் இறங்காமல், “வாய்க்கு வந்ததை பேசுவதை” அனுமதிக்க முடியுமா என்ன?

அதுவும் கலைமகள் சபா அலுவலகத்தில் பத்தாயிரம் சம்பளத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் அதுவும் பெண் ஊழியர்கள் என்றும் பாராமல், “எங்கள் சொத்தை வைத்து பிழைக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க. எங்கள் வயிற்றெரிச்சல் உங்களை சும்மா விடாது. நாசமாய் போவீர்கள்.” என்றெல்லாம் கலைமகள் சபா உறுப்பினர்கள் என்ற பெயரில் சாபம் விடுவதையெல்லாம் எப்படி புரிந்து கொள்வது?

இந்த விவகாரம் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இருந்து வருகிறது. நீதிமன்றத்தின் உத்தரவின்படிதான் ஓய்வுபெற்ற நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. சிறப்பு அலுவலராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டிருக்கிறார். பொது ஏலத்தில் விற்று காசாக்கி விகிதாச்சார அடிப்படையில் கலைமகள் சபா உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் உத்தரவு. அந்த உத்தரவை அமல்படுத்தும் இடத்தில்தான் ஒருநபர் ஆணையமும் கலைமகள் சபா அதிகாரிகளும் பணியாற்றி வருகிறார்கள். ஆக, இதில் எந்தவிதமான மாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்று யார் ஒருவர் விரும்பினாலும் அவர் அணுக வேண்டிய இடம் நீதிமன்றம்தானே தவிர, கண் எதிரில் உள்ள கலைமகள் சபாவின் கடை நிலை ஊழியர் அல்லவே?

இன்னும் விரிவாக பேசுவோம் …

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.