நியோமேக்ஸ் : ஏல நடைமுறைகள் என்ன ஆகும் ?

நியோமேக்ஸ்  - 08

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில் தற்போது, உச்சிப்புளி ரிசார்ட்ஸ்; திருச்சி மொராய்ஸ் சிட்டியில் 26 வீட்டு மனைகள்; கொடைக்கானல் டிரைவ் இன் ஹோட்டல்; விருதுநகர், தூத்துக்குடி, செங்கல்பட்டு மற்றும் திருச்சி – சனமங்கலத்தில் உள்ள தரிசு நிலங்கள் உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட 36 வகையான சொத்துக்களுக்கான ஏலம் 2026 டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

மேலும், டி.டி.சி.பி. அங்கீகாரம் பெற்ற 9935 வீட்டு மனைகளில் மூன்று சுற்று ஏலம் நிறைவடைந்த நிலையில், எஞ்சிய 3654 வீட்டு மனைகளுக்கான நான்காம் கட்ட ஏலம் 09.11.2026 முதல் 24.11.2026 வரையிலும் நடைபெறுகிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

முதல் மூன்று சுற்று ஏலத்தில் பங்கேற்று விருப்பத்தேர்வில் நிலங்களை தேர்வு செய்துவிட்டு, ஏலத்தை நடத்திய எம்.எஸ்.டி.சி. நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய சேவைக்கட்டணத்தை செலுத்தாத 1102 பேருக்கு இறுதி வாய்ப்பாக அக்-30 வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

நீதிமன்றத்தின் இறுதி அவகாசத்தையும் பொருட்படுத்தாதபட்சத்தில் வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் ஆஜராகி, அதற்குரிய காரணத்தை நேரில் தெரிவிக்க வேண்டும் என்பதாக நீதியரசர் பரதசக்ரவர்த்தி உத்தரவிட்டிருக்கிறார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மதுரை உயர்நீதிமன்றத்திற்கு பின்புறம் அமைந்துள்ள 38 ஏக்கர் அளவுள்ள காலி இடத்தை ஏலம் விடுவது தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற தொடர் விவாதங்களின் நீட்சியாக, 31 பாகங்களாக பிரித்து ஏலம் விடுவதென முடிவாகியிருக்கிறது. இதற்காக, களப்பணிகளை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுவரையில் நிறைவு பெற்றுள்ள ஏல நடைமுறையில், வெளி நபர்கள் ஆர்வத்தோடு பங்கேற்காதது ஏன்? என்ற கேள்வியும்; பணமாகவே தீர்வு வேண்டும் என்று காத்திருக்கும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு என்ன பதில் என்ற கேள்வியும்தான் தற்போதைய நிலையில் விடைகாண வேண்டிய கேள்விகளாகவே நீடிக்கின்றன.

இன்னும் உறுதி செய்யப்படாத பாண்டுகள்; ஜே.வி. பத்திரங்களின் நிலை உள்ளிட்ட விவகாரங்களும் இறுதி முடிவை எட்டாத நிலையில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் மனச்சோர்வை ஏற்படுத்தும் விவகாரங்களாக அமைந்திருக்கின்றன.

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

 

நியோமேக்ஸ் ஏலம்  குறித்த தகவல்களுக்கு…

ஏலம் தொடர்பான கள ஆய்வு மற்றும் சொத்து விவரங்களுக்கு EOW போலீசாரை தொடர்புகொள்ள : 90803 81065 மற்றும் 87782 45559

பதிவு மற்றும் ஏல உதவி மையம் MSTC அலுவலர்களை தொடர்புகொள்ள : 94990 54101 – 94990 54102 – 94990 54103 – 94990 54104.

ஏலம் தொடர்பான விரிவான அறிவிப்புக்கு : https://tneow.tn.gov.in/

MSTC இணையதளம் : www.mstcecommerce.com & https://www.mstcindia.co.in/

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.