திருச்சியில் புதிய மைல்கல் படைக்குமா ரோட்டரி கிளப் பீனிக்ஸ்?

திருச்சியில் ரோட்டரி கிளப் ஆஃப் பீனிக்ஸ் சார்பில் தீபாவளியை முன்னிட்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 55 மாணவர்கள் பங்கேற்று தங்களது விருப்பப்படி தீபாவளி பட்டாசுகளைத் தேர்வு செய்தனர். மாணவர்களுக்கு பட்டாசுப் பெட்டிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

மேலும், ரத்ததானம், கல்வி உதவி, மருத்துவ சேவை, போலியோ ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகளை ரோட்டரி அமைப்பு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். கொரோனா காலத்தில் மருத்துவமனைகளுக்கு வென்டிலேட்டர், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவியதையும் அவர்கள் நினைவுகூர்ந்தனர்.

பணம் சம்பாதிப்பதைத் தாண்டி சமூகத்திற்கு சேவை செய்வதே ரோட்டரியின் முக்கிய நோக்கம் என்றும், எதிர்காலத்தில் திருச்சியில் மேலும் பல மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

முழுமையான வீடியோ பதிவை காண

திருச்சியில் புதிய மைல்கல் படைக்குமா ரோட்டரி கிளப் பீனிக்ஸ்?

குழந்தைகளுக்கு தீபாவளி சர்ப்ரைஸ்!

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.