அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘ஆரியன்’ (AARYAN)

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு: ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ ஷுப்ரா, ஆர்யன் ரமேஷ், விஷ்ணு விஷால். டைரக்டர்: பிரவீன் கே. திரைக்கதை: மனு ஆனந்த். ஆர்டிஸ்ட்: விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானஸா செளத்ரி, கருணாகரன், அவினாஷ், ஜெயக்குமார், ஒளிப்பதிவு: ஹரிஷ் கண்ணன், இசை: ஜிப்ரான் வைபோதா, எடிட்டிங்: ஷான் லோகேஷ், ஸ்டண்ட்: சில்வா & பிரபு, எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்:சீத்தாராம், மார்க்கெட்டிங் & புரமோஷன்:சித்தார்த் ஸ்ரீனிவாஸ்,  பி.ஆர்.ஓ.: சதீஷ் (Aim)

‘என்னடா இது தமிழ்க்கூட்டத்துக்கு ஒவ்வாத கூட்டத்தின் பேரை டைட்டிலா வச்சுருக்காய்ங்களே. படமும் அந்தக் கூட்டத்தின் மேன்மையைப் பேசுமோன்னு நினைச்சு தான்  தியேட்டருக்குள்ள போனோம். ஆனா படத்தின் டைட்டிலையே நம்ம நினைச்சதுக்கு நேர்மாறா ஆரம்பிச்சதால, இந்த ஆரியன் மேல ரொம்பவே அஃபெக்‌ஷன் வந்துருச்சு. ஹலோ மக்களே… இந்த ஸ்க்ரிப்டே டோட்டல் டிஃபெரெண்ட், நாங்களும் ரொம்பவே டிஃப்ரெண்டுன்னு டி.வி.ரியாலிட்டி ஷோவுக்கு ‘பொருளதிகாரம்’னு டைட்டில் வச்சி ஆரியனை ஆரம்பிச்சுட்டார் டைரக்டர் பிரவீன் கே.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

'ஆரியன்' (AARYAN) அந்த டி.வி.சேனலின் தலைமைத் தொகுப்பாளினியாக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடத்தும் இந்த ஷோவின் லைவ் டெலிகாஸ்ட்டுக்கு வருகிறார் பிரபல இளம் நடிகர் ஒருவர். லைவ் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, “இவன் பின்னால இருக்கும் ரசிகனெல்லாம் தற்குறிங்க” [அடடா கரெக்டா மேட்ச் ஆகுதே] என சவுண்ட்விட்டு, ஆடியன்ஸ் மத்தியில் இருந்து அதிரடியாக ஷோ செட்டுக்குள் எண்ட்ரியாகி, துப்பாக்கியால் அந்த ஹீரோவின் காலில் சுட்டு அதகளம் பண்ணி, மொத்த சேனலையும் தனது மிரட்டலால் உட்கார வைக்கிறார் பிரபல எழுத்தாளர் அழகர் [ செல்வராகவன்].

“நான் அஞ்சு பேரை போட்டுத்தள்ளப் போறேன். அதுக்கு ஒரு மணி நேரத்துக்கு ,முன்னால அது யாருன்னு சொல்லுவேன். இதை போலீஸ் மட்டுமல்ல, ராணுவத்தால கூட தடுக்க முடியாது” என சவால்விடுகிறார். ஆனால் போலீஸ் அதிரடியாக ஸ்டுடியோவுக்குள் எண்ட்ரியானதும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால் அதற்குப் பிறகு தான் அழகர் சொன்னபடியே நடக்கிறது. அது எப்படி? அவர் போட்டுத்தள்ள நினைப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்? என்பதன் சூப்பர் பிரிலியண்ட் க்ரைம் த்ரில்லர் ஸ்கிரிப்டின் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘ஆரியன்’.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

படம் ஆரம்பிச்சு பத்து நிமிஷத்துலேயே கொலைகார வில்லன் யாருன்னு தெரிஞ்சு போச்சு. அதற்கடுத்த சில நிமிடங்களிலேயே அவனும் செத்துப் போயிடுறான். இதுக்குப் பிறகும்ம் இந்த ஸ்கிரிப்ட் எப்படிப் போகும்?னு நாம நினைச்சோம். இதுக்குப் பிறகு தான் கதையே இருக்கு பிரதர்னு டைரக்டர் பிரவீனும் ஸ்கிரிப்ட் ரைட்டர் மனு ஆனந்தும் மிரள வைக்கிறார்கள்.

AARYAN செத்துப் போன கொலைகாரன் யாருன்னு விசாரிக்க, கொடைக்கானலில் இருந்து ஸ்பெஷலாக வருகிறார் டிசிபி நம்பி [ விஷ்ணு விஷால் ]. இவர் விசாரிக்க ஆரம்பிக்கும் போதே, முதல் கொலையையும் அரங்கேற்றுகிறார் அழகர். இதனால் ரொம்பவே அதிர்ச்சியாகி, செம அலெர்ட்டாக இருக்கும் போதே அடுத்த கொலையும் நடக்கிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஆர்யன்’-ல் உள்ள முதல் இரண்டு ஏ, அதற்கடுத்து ஆர், அப்புறம் ஒய், அப்புறம் ஏ.  இந்த எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்கள் தான் செல்வராகவனின் கொலைக்குறி. இதை ரொம்பவே சிரத்தையாக விசாரிக்கும் டிசிபி நம்பியாக விஷ்ணு விஷால், தொந்தி இல்லாத செம ஃபிட்டான காக்கி யூனிபார்ம், ஷார்ப்பாக வெட்டப்பட்ட ஹேர்கட் என கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். பரபரக்கும்  கொலை விசாரணை ஒருபக்கம், மனைவி அனிதாவுடனான [ மானஸா செளத்ரி] விவாகரத்து வழக்கு மறுபக்கம் என மனுஷன் ரொம்பவே அல்லாடினாலும் கதைக்கான பேஸிக் கண்டெண்ட்டுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கார். “என்ன நம்பி சார் கரெக்ட் தானே” என ரெக்கார்ட் வீடியோவில் செல்வராகவன் கேட்டதும் அதிர்ச்சியாகும் சீனில் விஷ்ணு விஷால் செமத்தியாக எக்ஸ்பிரஷன் காட்டியிருக்கார். இரண்டு ஆக்‌ஷன் சீன்களிலும் வெரைட்டியாக வெளுத்துக் கட்டிவிட்டார் விஷ்ணு விஷால்.

படத்தில் விஷ்ணு விஷாலுக்கு அடுத்து செகண்ட் ஹீரோன்னா அது நம்ம செல்வராகவன் தான். லைவ் ஷோவில் “ஹீரோல்ல அதுனால அவன் நல்லா நடிப்பான்” எனச் சொல்லியடி கர்சீப்பைத் தூக்கிப் போட்டு, “தொடச்சுக்கடா டேய்…” என மிரட்டலாக சொல்வதாகட்டும், “என்னோட லிஸ்ட்ல நீ கூட இருக்கலாம்மா” என ஷ்ரத்தாவிடம் பவ்யமாக மிரட்டுவதாகட்டும், “விளம்பர வெறி இல்லாம, தன்னலம் பார்க்காமல் சமூகத்துக்கு உழைக்கும் எளிய மனிதர்களைக் கொண்டாடுங்கடா நாதாரிப்பயலுகளா” என ஆவேசம் பொங்க சொல்வதாகட்டும் செல்வராகவன் செம ஜோர். இந்த அழகர் கேரக்டரின் வழியே சோஷியல் மீடியா கூலிப்படைகளின் மண்டையின் நங்குன்னு ஒரு கொட்டு கொட்டியிருக்கார் டைரக்டர் பிரவீன்.

AARYAN  “அந்த பொம்ளப் பொறுக்கி நடிகனை நான் ஏன் பேட்டி எடுக்கணும்?” என்பதில் ஆரம்பித்து செல்வராகவன் முன்பு உயிர் பயத்துடன் உட்கார்ந்திருந்தாலும், பின்பு அவரையே மடக்குவது வரை ஷ்ரத்தா ஸ்ரீநாத்…சபாஷ் ஷ்ரத்தா. மானஸாவுக்கு சில சீன்கள் தான் என்றாலும் மனதில் நிற்கும்படியான ஒரு காட்சின்னா விஷ்ணு விஷாலின் கையைபற்றிக் கொண்டு ஆறுதல் சொல்லும் சீன் தான்.

இந்த ‘ஆரியனின்’ பேக்போர்ன் என்றால் மியூசிக் டைரக்டர் ஜிப்ரான் வைபோதாவும் கேமராமேன் ஹரிஷ் கண்ணனும் தான். பின்னணி இசையில் மிரட்டிவிட்டார் ஜிப்ரான்.

இந்த ஆரியனின் சூப்பர் ஸ்பெஷாலிட்டியே க்ளைமாக்ஸ்க்குப் பிறகும் ஸ்கிரிப்டை டெம்போ குறையாமல் கொண்டு போய் அடுத்த பாகத்திற்கான ட்விஸ்டுடன் முடித்திருப்பது தான். வெல்டன் டைரக்டர் பிரவீன் ப்ரோ & ஸ்கிரிப்ட் ரைட்டர் மனு ஆனந்த் ப்ரோ.

‘ஆர்யன்’ நல்ல ரசனையாளர்களுக்கானவன்.

   —    ஜெ.டி.ஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.