நியூயார்க் நகர மேயர் தேர்தல் முடிவுக்கு வந்தது…
அனைத்து கருத்து கணிப்புகளின்படி ஜோரான் மம்தானி உறுதியாக பெரும்பான்மை வாக்குகளோடு வெல்வார் என்று முடிவுகள் வெளியாகி உள்ளன.
ஜோரான் மம்தானி ஒரு இந்திய வம்சாவளியினர். அவரது தாயார் மீரா நாயர் புகழ்பெற்ற இநதிய வம்சாவளி இயக்குநர். அவரது தந்தையார் மொகமத் மம்தானி ஒரு மிகப் பெரிய கல்வியாளர். அவர் குஜராத்தை சேர்ந்தவர்.
நாளை வெளி வரப் போகும் தேர்தல் இறுதி முடிவுகளில் மம்தானி அறுதிப் பெரும்பான்மையோடு வெல்வார் என்று உறுதியாக நம்பப்படுகிறது.
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக ஆன போது இந்திய சமூகம் அவரை தலையில் வைத்து கொண்டாடியது. ஏனென்றால் அவரது தந்தை நைஜீரியர் ஆனாலும் அவரது தாயார் இந்தியாவில்.. அதுவும் தஞ்சையை பூர்வீகமாக கொண்ட பார்ப்பன குடும்பம்..

இப்போது கூட சமீபத்தில் அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்சின் மனைவி உஷா வான்ஸ்.. அனைத்து இநதியர்களாலும் கொண்டாடப்பட்டார். ஏனென்றால் உஷா ஹைதராபாத்தை சேர்ந்த உயர்சாதி இந்து.
அதே நேரம்.. தந்தை.. தாய் இருவரும் இந்திய வம்சாவளியாக இருந்தும்.. தூய இந்திய ரத்தமான மம்தானியை இந்திய வம்சாவளியினர் இப்போது வரை கொண்டாடவில்லை. அதற்குக் காரணம் பாப்கார்ண் புத்திதான் என்பது தெள்ளத் தெளிவு. மீரா நாயர் உயர் சாதி ஆனாலும் மம்தானியின் தந்தையார் மிகப் பெரிய கல்வியாளர் ஆனாலும் அவர் ஒரு முஸ்லிம். ஒட்டு மொத்த இந்திய மீடியாவின் வெறுப்புணர்வுக்கும் இதுதான் காரணம்.

மிக மிக குறைந்த வயதில் மேயராக பொறுப்பேற்கப் போகிற மம்தானிக்கு முதல் சிறப்பே குறைந்த வயது மேயர் என்ற சிறப்புதான். இரண்டாவது.. முதல் முதலில் உலகின் மிக முக்கியமான நகரமான நியூயார்க் நகரின் மேயராக பொறுப்பேற்க இருக்கும் மம்தானி.. அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி மேயராவார்.
முற்போக்கு கருத்துகளும்.. மக்களுக்கான திட்டங்களும் கையிலெடுத்தபடி மேயராகும் மம்தானிக்கு மனங்கனிந்த வாழ்த்துகள்.
நீங்க கலக்குங்க ப்ரோ..
– நந்தன் புதிய ஸ்ரீதரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.