அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தூய்மையற்ற நகரம்! வெற்றிக் கோப்பைகளுடன் திமுக அமைச்சர்கள்!

திருச்சியில் அடகு நகையை விற்க

தூய்மையற்ற நகரம் முதலிடம் பிடித்த மதுரை மாநகராட்சி  திமுக அமைச்சர்கள், எம்.பி.கைகளில் பரிசு கோப்பைகளுடன் நோட்டீஸ் பரபரப்பு முதல் பரிசுக்கான கோப்பையை மாநகராட்சி ஆணையாளரிடம் வழங்கவுள்ளதாக அறிவிப்பு…

2025ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் 10 தூய்மையற்ற நகரங்கள் பட்டியலை மத்திய அரசின் Swachh Survekshan வெளியிட்டுள்ளது. இதில் மதுரை மாநகராட்சி முதல் இடத்தை பெற்றுள்ளது. இது மதுரை மக்களிடையே பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

வெற்றிக் கோப்பைகளுடன் அமைச்சா்கள்இந்நிலையில் மதுரை பாஜக நிர்வாகி ஒருவர் மதுரை மாநகர் பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் வெற்றி!!! வெற்றி!!! என்ற வாசகத்துடன் அமைச்சர் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் , நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர்கைகளில் வெற்றி கோப்பைகளை வைத்திருப்பது போலவும் முதல் பரிசுக்கான கோப்பையை நாளை காலை மாநகராட்சி ஆணையாளரிடம் வழங்க உள்ளதாகவும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மேலும் அந்த சுவரொட்டியில் ஆன்மீக நகரம் தன்னை தானாக நிர்மானித்துக்கொண்ட நகரம், தூங்கா நகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் இன்றிலிருந்து நிர்வாக திறமையால் அசுத்தமான நகரம் என்று முதலிடம் பெற்று தந்த பாராளுமன்ற, சட்டமன்ற, மாமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் அனைவருக்கும் நன்றி!!! என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

https://www.livyashree.com/

மதுரை மாநகராட்சி தூய்மையற்ற நகரங்களில் முதல் இடம் பிடித்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினர் மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடப்பட்டது.

  —   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.