அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கொள்ளையடித்த ஹோட்டலில் உல்லாசம்! சிசிடிவியில் சிக்கிய காதல் ஜோடி!

திருச்சியில் அடகு நகையை விற்க

டேய்! யார்ரா நீங்க எல்லாம் உங்களுக்கு நேரம் காலம் இல்லையான்னு சொல்ற அளவுக்கு ஒரு சம்பவம் தான் அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் நள்ளிரவில் திருடச் சென்ற ஜோடி, உணவகத்திற்குள் நுழைந்ததும் பாலியல் செயலில் ஈடுபட்டு பின்னர் கொள்ளையடித்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வினோத உலகம்இவர்களின் அனைத்து நடத்தைகளும் அங்கு பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதிகாலை 3 மணியளவில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள ‘மான் செரி’ (Mon Cheri) என்ற பிரபலமான உணவகத்திற்குள் நுழைந்துள்ளனர். திருடுவதற்காக நுழைந்த இவர்கள் அங்கு முதலில் பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னரே அவர்கள் திருட்டு வேலையை நடத்தி இருக்கின்றனர். அந்த உணவகத்தின் கதவுகளையும் அவர்கள் சேதப்படுத்தி சுமார் $450 டாலர் (இந்திய மதிப்பில் 39,000 ரூபாய்), ஊழியர்கள் பயன்படுத்தும் ஐ போன், மதுபான பாட்டில் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

வினோத உலகம்இந்த வினோத திருட்டு சம்பவம் குறித்து உணவகத்தின் உரிமையாளர் லெக்ஸி கலிஸ்கன் கூறுகையில், “இது மிகவும் விசித்திரமான மற்றும் அருவருப்பான செயல். எங்களின் உணவகம் காதல் மற்றும் கொண்டாட்டங்களுக்கு பிரபலமானது. ஒருவேளை எங்கும் ரோஜாப்பூக்களாக இருந்ததால், அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம்” என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளில் பதிவான ஆதாரங்களைக் கொண்டு இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

—    மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.