கைகோர்த்த இசைஞானியும் யுவன் சங்கர் ராஜாவும்!
புதிய தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்டார் சினிமாஸ்’ முகேஷ் செல்லையா தயாரிப்பில், பொன்ராம் டைரக்ஷனில் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்புசீவி’ படத்திற்காக இசைஞானி இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் முதன்முறையாக இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர்.
கவிஞர் பா.விஜய் வரிகளில் உருவான “அம்மா என் தங்ககனி, நீதானே எல்லாம் இனி, தாலாட்டும் பாட்டு இங்கே யார் சொல்வார்” என்ற உணர்வுப்பூர்வமான பாடல் தான் அது. படப்பிடிப்பு தேனியில் தொடங்கி சென்னையில் நிறைவுற்றது.
புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்கிறார். சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியெம் எடிட்டிங் : தினேஷ், கலை இயக்கம்: சரவண அபிராம், ஸ்டண்ட்: ஃபீனிக்ஸ் பிரபு & சக்தி சரவணன், நடனம்: ஷெரிப், அசார். நிர்வாகத் தயாரிப்பு: ஜெயசங்கர், செல்வராஜ்.
தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி ஏரியா கிராம மக்களின் வாழ்க்கையை இப்படம் பேசுகிறது. வரும் டிசம்பர் மாதம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘கொம்பு சீவி’.
-ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.