அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘யெல்லோ’ ( Yellow)

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு : ‘கோவை பிலிம் ஃபேக்டரி ‘ பிரசாந்த் ரங்கசாமி. டைரக்டர்: ஹரி மகாதேவன்.  ஆர்டிஸ்ட்: பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், டெல்லி கணேஷ், சாய் பிரசன்னா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, வினோதினி வைத்தியநாதன், லீலா சாம்சன், டைரக்டர் பிரபுசாலமன், விக்னேஷ்வர், லோகி, அஜய். இணை இயக்குநர்: ஹரிஷ்மா சரவணன், ஒளிப்பதிவு: அபி ஆத்விக், இசை: ஆனந்த் காசிநாத், எடிட்டிங்: ஸ்ரீவாட்சன், பி.ஆர்.ஓ: பரணி அழகிரி.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஆதிரை [ பூர்ணிமா ரவி ] தனியார் வங்கி ஒன்றில் கடன் வசூல் பிரிவில் வேலை பார்க்கிறார். இவரின் லவ்வர் சந்தோஷுக்கு[ சாய் பிரசன்னா] பிஸ்ட்ஸ்பிலானியில் படிப்பு, கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்‌ஷன், கைநிறைய சம்பளம், இனிய நினைவுகளுடன் வாழ்க்கை. இதான் லட்சியம். தனது லவ்வர் ஆதிரையையும் இந்த மைண்ட்செட்டுக்கு கொண்டு வருகிறார். இந்த நிலையில் தான் ஆதிரை[எ] ஆதியின் அப்பா டெல்லி கணேஷுக்கு திடீரென பக்கவாதம் வந்து வீட்டிலேயே முடங்கிவிடுகிறார். அம்மா, தங்கை, அப்பா இவர்களைக் கவனிக்கும் குடும்பச்சுமை மொத்தமும் ஆதிரையின் மீது விழுகிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

'யெல்லோ' '(Yellow)
‘யெல்லோ’ ‘(Yellow)

இதனால் சந்தோஷின் லட்சியம் தகர்கிறது. ஆதிரையை பிரேக்கப் பண்ணிவிட்டு வேறொருத்தியை கல்யாணம் செய்கிறார். லவ் பிரேக்கப் ஆன விரக்தியில் தனது பழைய உறவுகள், அந்த உறவுகளின் உன்னதமான உணர்வுகளைத் தேடி… தனி மனுஷியாக பயணத்தை ஆரம்பிக்கிறார் ஆதிரை.

https://www.livyashree.com/

அதன் பின் வெண் திரையில் நமக்கு  கிடைப்பதெல்லாம் வெண் பஞ்சு மேகங்களுக்கிடையே பயணம் செய்த மென்மையான சுகானுபவம், பேரானந்தம், பெரும் நம்பிக்கை, உற்சாக ஊற்று. எழுத்தில் விவரிக்க இயலாத, மாசு இல்லா காற்றை சுவாசித்த ஆகப் பெரிய திருப்தி.

பயணக் கதை சினிமாக்கள் பலவற்றை இதற்கு முன் நாம் பார்த்திருக்கிறோம். அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம். ஆனால் இந்த ‘யெல்லோ’ வில் கதையின் நாயகி பூர்ணிமா ரவியின் பயணமும் அவரின் ஆசைகளும் ஏக்கங்களும் முற்றிலும் புதுவிதமாகத் தெரிவது தான் படத்தின் பெரும் பலம்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சென்னையைவிட்டு பூர்ணிமா ரவி கிளம்பியதும் முதலில் போவது கேரளாவின் கொச்சினில் உள்ள தனது தோழி நமீதா கிருஷ்ணமூர்த்தியைத் தேடித்தான். “எந்த நம்பிக்கைலடி வந்தே”—இது நமீதா கிருஷ்ணமூர்த்தி. “நம்பிக்கைல இல்ல, பயத்துல வந்தேன்”—இது பூர்ணிமா ரவி. இங்க தான் ‘யெல்லோ’ டேக் ஆஃப் ஆகிறது. நமீதாவின் ஆஃப் பேண்ட், பாய் ஃபிரண்ட் அட்டாச் இதெல்லாம் சற்றும் உறுத்தாமல் இலகுவாக கடந்து போவதில் தான் டைரக்டர் ஹரி மகாதேவனும் இணை இயக்குனர் ஹரிஷ்மா சரவணனும் வெற்றி பெற்றுவிட்டார்கள். படத்தில் கடுகளவு ஆபாசமோ, அதைவிட சிறிய அளவில் கூட ரத்தமோ இல்லாமல் நட்பின் ரத்த பாசத்தை ரசனையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார் டைரக்டர் ஹரி மகாதேவன்.

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சிஇந்த ‘யெல்லோ’வின் எல்லா சீன்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் பூர்ணிமா ரவி தான். சாய் பிரசன்னாவுடன் லவ் பிரேக்கப் ஆனதும் ஆற்றாமையும் அழுகையும் சேர்ந்து வெளிப்படுத்துவது, படுக்கையில் அப்பா டெல்லி கணேஷ் படுத்திருக்க, அவர் அருகே படுத்தவாறு பாசத்துடன் பேசுவது[அப்பா-மகள் உறவின் மகிமையைச் சொல்லும் கவிதை ரசனை சீன் இது}, க்ளைமாக்ஸுக்கு முன்பு ரயில்வே ஸ்டேஷனில் சாய் பிரசன்னாவை அவரது மனைவியுடன் பார்த்ததும் , “ஹனிமூனுக்குத் தானே வந்தீங்க” என கேட்டுவிட்டு கம்பீரமாக நடப்பது, பயணத்தின் இடையில் சந்தித்த சாய் [ வைபவ் முருகேசன்] இடமிருந்து தூய நட்பு வெளிப்பட்டதும் காட்டும் எக்ஸ்பிரஷன், வானவில்லைப் பார்த்ததும் வெளிக்காட்டும் முகபாவனை, ரயிலில் போகும் போது, கதவுக்கு வெளியே முகம் காட்டி ஜில்லென்ற காற்றை வாங்கும் பாங்கு என பூர்ணிமா ரவி… பரிபூரண நடிப்பை வெளிப்படுத்தி, நம்மை வசப்படுத்தி ஜெயித்திருக்கிறார்.

இவருக்கு அடுத்து சாய் கேரக்டரில் வரும் வைபவ் முருகேசனுக்கு தாராளமாக சபாஷ் போடலாம். நண்பனுடன் சேர்ந்து ஸ்டார்ட்-அப் கம்பெனி ஆரம்பித்து கடனாளியான கதையை காமெடி கலந்து வைபவ் சொல்லும் சீன் செம பியூட்டி. பூர்ணிமாவுக்கு உதவுவதற்காக அவருடனேயே ஏன் பயணிக்கிறார் என்பதற்கு ஃப்ளாஷ் பேக் பேங்க் சீனை கச்சிதமாக கனெக்ட் பண்ணியிருக்கார் டைரக்டர். கேரளாவில் இவர்களுக்கு  உதவும் மணி அண்ணன் கேரக்டரில் டைரக்டர் பிரபுசாலமனுக்கு இரண்டு சீன்கள் தான் என்றாலும் இரண்டுமே மனசுல நிக்குது.

இந்த ‘யெல்லோ’வின் பிக் பில்லர் என்றால்…. அது கேமராமேன் அபி ஆத்விக் தான் என்பதை கேமரா மீது சத்தியம் பண்ணி சொல்லலாம். அடேங்கப்பா… இந்த மாதிரி லொக்கேஷன்களை நாம் லட்சக்கணக்கில் செலவு பண்ணினாலும் பார்க்க முடியாது. தார்ச்சாலை, கரடுமுரடான மண்பாதை, வனம், மலை, பாறை, நீர்வீழ்ச்சி என சகோதரன் அபி ஆத்விக் ரொம்பவே கடும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார். வினோதினி வைத்தியநாதன் ஃப்ளாஷ்பேக்கை பிளாக் & ஒயிட்டில் காண்பித்து, அதில் பூர்ணிமா ரவி, வினோதினியின் தோளில் தலை சாய்ப்பதை மட்டும் கலரில் மிக்ஸ் பண்ணி, பின்பு மரத்தூணில் தலை சாய்ப்பது போல் காட்டியது பலே…பலே..  குறிப்பாக  க்ளைமாக்ஸில் பூர்ணிமாவும் வைபவும் ரயிலில் போகும் போது, நெடிதுயர்ந்த பாறையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சியை அப்படியே கீழிறக்கி, ரயில் பாலத்தின் கீழே கொண்டு வந்து காண்பிக்கிறாரே…. அப்படியே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டோம். நீங்களும் சரி, டைரக்டர் ஹரி மகாதேவனின் இளமைப் பட்டாளமும் சரி, சினிமாவில் நல்லா வருவீக ப்ரோ…

பின்ணனி இசையமைத்த ஆனந்த் காசிநாத், எடிட்டர் ஸ்ரீவாட்சன் உட்பட எல்ல்லோருமே இந்த ‘யெல்லோ’வின் பசுமைப் பக்கங்கள்.

தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கை தரும் இந்த இளம் பட்டாளத்திற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் பிரசாந்த் ரங்கசாமியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

—   ஜெ.டி.ஆர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.