TAHDCO- வின் SC/ST தொழில்முனைவோருக்கான தொழில் வளர்ச்சி பயிற்சி முகாம் !
டிசம்பர் 20இ 2025 தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (TAHDCO), டிசம்பர் 20இ 2025 அன்று மண்டல அளவிலான SC/ST தொழில்முனைவோருக்கான விற்பனையாளர் மேம்பாட்டுத் திட்டம் (Vendor Development Programme) மற்றும் தொழில் வளர்ச்சி பயிற்சி முகாமை (Business Facilitation Workshop)) திருச்சியில் கோர்ட்யார்டு பை மேரியட் (Courtyard by Marriott) நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
தாட்கோ மேலாண்மை இயக்குநர் K.S. கந்தசாமி, இ.ஆ.ப., நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் தாட்கோ மூலம் கடந்த இரண்டாண்டுகளாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்காக நடத்தப்பட்ட கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தின் அடுத்த கட்டமாக தொழில் முனைவோரையும்இ மத்திய மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களையும் இணைக்கும் பொருட்டு இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டதாக தெரிவித்தார். தாட்கோவின் மூலமாக செயல்படுத்தப்பட்டுவரும் முன்னெடுப்பு திட்டங்கள் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தினைப் பற்றியும், இத்திட்டங்கள் மூலமாக பயனடைந்த பயனாளிகளின் வாழ்வாதார முன்னேற்றத்தைப் பற்றியும் தெரிவித்தார்.
பாரத மிகுமின் நிறுவனம் (BHEL), நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC) மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் (TNPL) ஆகிய நிறுவனங்கள் தங்களின் கொள்முதல் நடைமுறைகள்இ விற்பனையாளர் பதிவு மற்றும் விநியோகச் சங்கிலி வாய்ப்புகள் குறித்து விளக்கின. கேள்வி–பதில் (Q&A) அமர்வில், தொழில்முனைவோர் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர்.
மேலும்இ தொழில்முனைவோரின் திறன்களை மேம்படுத்த தொழில் வளர்ச்சி பயிற்சி முகாம் நடைபெற்றது. பங்கேற்பாளர்களுக்கு பிராண்டிங், பேக்கேஜிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங், நிதி மேலாண்மை, தரச்சான்று மற்றும் GeM குறித்த மாஸ்டர் கிளாஸ் (Masterclass) நடத்தப்பட்டது.
ஒரு தனித்துவமான பிராண்ட் அடையாளத்தின் அவசியம்இ சந்தைப்படுத்துதல்இ பிராண்டிங்கிற்கான அடிப்படை வழிகாட்டுதல்கள் மற்றும் பிராண்டை நிலைநிறுத்தி வளர்ப்பதற்கான திறன்கள் குறித்து தொழில்முனைவோருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் தொழில்முனைவோர் அவசியமாக அறிந்து கொள்ள வேண்டிய நிதி மேலாண்மை தகவல்கள், GST, வருமான வரி, பதிவுகள் போன்றவை குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. GeM தளத்தில் பதிவு செய்வதுஇ பொருள் பட்டியலிடுதல் (Cataloguing), பொருள் வகைப்படுத்தல் போன்ற வழிகாடுதல்கள் வழங்கப்பட்டன. இது, அரசு இ-சந்தையில் (GeM) தங்களின் வணிக முன்னிலையை வலுப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது.
இந்த நிகழ்வின் மூலம்இ SC/ST தொழில்முனைவோருக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதிலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதிலும் தாட்கோ தனது பங்கினை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து வேலூர், கோயம்புத்தூர், மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் SC/ST தொழில்முனைவோருக்கான விற்பனையாளர் மேம்பாட்டுத் திட்டம் (Vendor Development Programme) மற்றும் தொழில் வளர்ச்சி பயிற்சி முகாம்கள் (Business Facilitation Workshop) நடத்தப்படவுள்ளது.
இன்று (20.12.2025) திருச்சி கோர்ட்யார்டு பை மேரியட் (Courtyard by Marriott) நட்சத்திர விடுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தாட்கோ மூலம் தொழில்முனைவோருக்கான விற்பனையாளர் மேம்பாட்டுத் திட்டம் (Vendor Development Programme)) மற்றும் தொழில் வளர்ச்சி பயிற்சியினை (Business Facilitation Workshop), தாட்கோ மேலாண்மை இயக்குநர் K.S. கந்தசாமிஇ இ.ஆ.ப.இ தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன.








Comments are closed, but trackbacks and pingbacks are open.