அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள்

திருச்சியில் அடகு நகையை விற்க

மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய பணிகளில் ஒரு வருட கால தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. திட்ட ஒருங்கிணைப்பாளர் PROJECT CO-ORDINATOR (1 பணியிடம்) தொகுப்பூதியம் ரூ.28,000/-(மாதம் ஒன்றிற்கு)
கல்வித்தகுதி:- சமூகப்பணி /சமூகவியல்/ குழந்தைகள் மேம்பாடு/ மனித உரிமை, பொது நிர்வாகம் /உளவியல்/ மனநலம்/ சட்டம் /பொது சுகாதாரம் / சமுதாய வள மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
Post Graduate degree in Social Work / Sociology / Child Development / Human Rights, Public Administration / psychology / Psychiatry / Law / Public Health /Community Resource Management from a Recognized University.
(அல்லது)
சமூகப்பணி /சமூகவியல்/குழந்தைகள் மேம்பாடு/மனித உரிமை, பொது நிர்வாகம் /உளவியல்/மனநலம்/ சட்டம் / பொது சுகாதாரம் / சமுதாய வள மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் திட்ட உருவாக்கம் / செயல்படுத்துதல், குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாடு / சமூகநலன் ஆகிய துறைகளில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Graduate degree in Social Work / Sociology / Child Development / Human Rights Public Administration / psychology / Psychiatry / Law / Public Health /Community Resource Management from a Recognized University with 2 Year’s experienced in project formulation / implementation, monitoring and supervision in the preferably in the field of Women and Child Development / Social Welfare. கணிணி இயக்குவதில் திறன் பெற்றிருக்க பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வேண்டும். அவசர உதவி எண்களில்
Proficiency in Computers. Preference may be given to personnels of working in Emergency Helplines.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

2. மேற்பார்வையாளர் SUPERVISOR (1 பணியிடம்) : தொகுப்பூதியம் – ரூ.21,000/- (ஒரு மாதத்திற்கு) சமூகப்பணி/கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம் /சமுதாய சமூகவியல் /சமூக அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் (10+2+3 மாதிரி), கணினி இயக்குவதில் தேர்ச்சி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அவசர உதவி மையங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் (Graduate Preferably in B.A in Social Work / Computer Science / Information Technology / Community Sociology / Social Sciences from a recognized University. Weightage for work experienced candidate, Proficiency in computers and Preference may be given to personnel’s having experience of working in Emergency Help line) வயது தகுதி 01.05.2026 அன்றுபடி 42 வயது பூர்த்தியடையாதவர்களாக இருக்க வேண்டும். அவசர உதவி மைய சேவைகளில் முன் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு (மட்டும் 2025-2026 நிதியாண்டின் இறுதி வரை) 10 ஆண்டுகள் வரை ஒரு முறை வயது தளர்வு அனுமதிக்கப்படலாம்.
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சுயசான்றொப்பமிட்ட கல்விச் சான்றுகளின் நகல், பணி அனுபவ சான்றுகளின் நகல் இணைக்கப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பபடிவங்கள், உரிய சான்றிதழ்களின் நகல் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும். மேற்கண்ட பணியிடங்கள் மதிப்பூதிய அடிப்படையிலான தற்காலிக அடிப்படையிலானது.
https://tiruchirappalli.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்கள் 06.06.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி 620 001. என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் (நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,இ.ஆ.ப.,  தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.