இந்த வார வேலைவாய்ப்பு செய்திகள் (7.10.2026 – 14.10.2026)
கனரா வங்கியில் 3500 அப்ரென்டிஸ் வேலை
பொதுத்துறையை சேர்ந்த கனரா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
‘அப்ரென்டிஸ்’ பிரிவில் கர்நாடகா 581, உ.பி., 409, தமிழகம் 391, ஆந்திரா 247, கேரளா 240, மஹாராஷ்டிரா 205 உட்பட மொத்தம் 3500 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு (1.1.2023 முதல் 1.9.2026க்குள் தேர்ச்சி)
வயது: 20-28 (1.9.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 16,650
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை
கடைசிநாள்: 17.10.2026
விவரங்களுக்கு: canarabank.bank.in
பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பில் வேலை
பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பில் (டி.ஆர்.டி.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘அப்ரென்டிஸ்’ பிரிவில் கிராஜூவேட் 50, டெக்னீசியன் 30, டிரேடு 115 என மொத்தம் 195 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., (2002 -2026ல் தேர்ச்சி)
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்
பயிற்சி காலம்: ஓராண்டு
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 1.11.2026
விவரங்களுக்கு: drdo.gov.in
ரயில்வே சேர விருப்பமா
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தடகளம் 15, கிரிக்கெட் 11, குத்துச்சண்டை 9, வாலிபால் 9, கால்பந்து 8, ஹாக்கி 7 உட்பட மொத்தம் 62 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ.,
கூடுதல் தகுதி : சர்வதேச / தேசிய / பல்கலை போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
வயது : 18 – 25 (1.1.2027ன் படி)
தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள் : 25.10.2026
விவரங்களுக்கு : iroams.com
தேசிய வேதியியல் ஆய்வகத்தில் வேலை
மஹாராஷ்டிராவின் புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வகத்தில் (என்.சி.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.டி.எஸ்., பிரிவில் மொத்தம் 24 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு
வயது : 18 – 25 (4.11.2026ன் படி)
தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 4.11.2026
விவரங்களுக்கு : https://recruit.ncl.res.in/
மும்பை துறைமுகதில் எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் வேலை
மும்பை துறைமுக ஆணையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எக்சிகியூட்டிவ் இன்ஜினியர்(சிவில்) 19, அசிஸ்டென்ட் எஸ்டேட் மேனேஜர் 2, டிராபிக் மேனேஜர் 1, செக்யூரிட்டி ஆபிசர் 1 உட்பட மொத்தம் 25 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ பி.எல்.,
வயது: 18-35 (28.10.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள்: 28.10.2026
விவரங்களுக்கு: mumbaiport.gov.in
தேசிய மின்சார நிறுவனத்தில் மேனேஜர் வேலை
தே சிய மின்சார நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அசிஸ்டென்ட் ஆபிசர் 4, ‘மேனேஜர்’ பிரிவில் மெக்கானிக்கல் 11, எலக்ட்ரிக்கல் 2, சிவில் 1 உட்பட மொத்தம் 19 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 20-50 (13.10.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 13.10.2026
விவரங்களுக்கு: careers.ntpc.co.in






Comments are closed, but trackbacks and pingbacks are open.