லுங்கிபாய்ஸ் ராஜ்பிரியனுக்கு ஐபிஎல் மூலம் தான் உலகம் முழுவதும் பெருவெளிச்சம் கிடைத்தது. அவர் அதற்கு முன்னரே நிறைய சீன்களை ஹரிராஜன் உடன் recreate செய்திருப்பார். தனுஷின் ராயன் எல்லாம் பட்டாசாக இருக்கும். இருவரும் சேர்ந்து பாடல்களை recreate செய்திருப்பார்கள். செம்மையாக இருக்கும்.
“எப்பா லுங்கிபாய்ஸ் தெரியலப்பா… என்ன தெரியாதான்னு கேக்குறாங்க.. மன்னிச்சுக்கங்க” என்று பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி கலகலப்பாக சொல்லும்போது அந்த கேலரியே அதிர்ந்தது. சீன் படம் சூர்யா உடன் வருகிறது. ஆல் தி பெஸ்ட் ராஜ் பிரியன் அவரை போன்று ஹரியும் நன்றாக வர வேண்டும்.
மல்லேஷ், பாலா: பாலா பத்தாவில் வருவார். வடக்கன் மாதிரி நடித்த அவர் வீடியோ அதகளமாக இருக்கும். மல்லேஷ் தான் அவர்கள் சேனல் இயக்குனர். அன்றாட நிகழ்வுகளை இருவரும் சேர்ந்து எடுக்கும் வீடியோக்கள் செம்ம. சிக்கோம்டா அவ என்று தங்கையை திருமணம் செய்வதை தடுக்க முயற்சி செய்யும் ஷார்ட்ஸ் சூப்பராக இருக்கும்.
இவர்கள் எல்லோருமே deserving actors. எந்த content ம்ம் அருவெறுப்பாக இருக்காது. எல்லோரும் என்ஜாய் பண்ணுற மாதிரி எடுப்பவர்கள். தமிழ் சினிமா இவர்களை இன்னும் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
– பவானிமணியன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.