கவிசெல்வாவின் ”இதயம் எழுதிய கவிதை” நூல் வெளியீட்டு விழா !
கடந்த 31-12-2025 அன்று திருச்சி கலையரங்கம், A/C ஹாலில், கவிஞர் கவி செல்வா முதல் கவிதைத் தொகுப்பான “கவிசெல்வாவின் இதயம் எழுதிய கவிதை” என்ற நூல் வெளியீட்டு விழாவானது சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க மாநில இலக்கிய அணி துணைத் தலைவருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன், தலைமையில் தலைமையுரையாற்றி சிறப்பு செய்ய, கவிதை நூலை திராவிட முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா MP வெளியிட்டு வாழ்த்தினார். மணப்பாறை கல்வியாளர் சௌமா ராஜரத்தினம் மகேஸ்வரி தம்பதியினர் நூலினைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார் .
திரைப்பட இயக்குநர் மீரா கதிரவன், தி.மு.க மாநில ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப அணி கோவி.லெனின், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் தமிழ்பேரவை தலைவர் முனைவர் கவிஞர்.த.இந்திரஜித், கடவூர் மணிமாறன், மற்றும் முனைவர் கவிஞர் தமிழ் மணவாளன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தார்.
மேற்படி விழா மேனாள் துணை இயக்குநர் தமிழ் வளர்ச்சிதுறை சிவசாமி, மேனாள் இயக்குநர் – நெடுஞ்சாலைத்துறை நரசிம்மன், செயலாளர் பைந்தமிழியக்கம் வேல்முருகன், பொதுச்செயலாளர் திருச்சி மாவட்டம் எழுத்தாளர் சங்கம் ஜவகர் ஆறுமுகம், நிறுவனர் நந்தவனம் பதிப்பகம் நந்தவனம் சந்திரசேகர், கல்வியாளர் முனைவர் ஜெயலெட்சுமி, அமைச்சர் திருச்சி தமிழ்ச்சங்கம் உதயகுமார், பைந்தமிழியக்கம் புலவர் தமிழாளன், ஆசிரியர் கோபால்சாமி, பொறிஞர், தமிழ் பணி இதழ் ஆசிரியர் கவிஞர் திருவள்ளுவர், ஆகியோரது முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மற்றும் பொறுப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் காவல்துறை நுண்ணறிவு பிரிவை சார்ந்தவரும், இந்நாள் சமூக போராளி கவிஞர் கவி செல்வா, தனது பணிக்கால அனுபவங்கள், சமூகப் பார்வை, மனிதநேய உணர்வுகள் மற்றும் கடந்து வந்த பாதைகள் ஆகியவற்றை கவிதைகள் அடங்கிய ஒரு நல்ல நூலாக தொகுத்துள்ளார். மேற்படி இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட ஆளுமைகள் மற்றும் கவிஞர்கள் தங்களது சிறப்புரை மற்றும் வாழ்த்துரையில் இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளானது சமூக சிந்தணைகளையும், மனித நேயத்தையும் சார்ந்ததால் இது வாசகர்களின் மனதைத் தொட்டதாக அனைவராலும் பாராட்டப்பட்டது.
மேற்படி ஆசிரியர் கடந்த 2018-ஆம் ஆண்டு மறைந்த முத்தமிழ் அறிஞர், எழுச்சி நாயகர், அரசியல் சாணக்கியர், மு.கருணாநிதி அவர்களுக்கு எழுதிய இரங்கற்பா மூலம் இவர் உலகம் அறிந்த ஒரு நல்ல கவிஞராக வரலாற்றில் அடையாளம் பெற்று அனைவராலும் போற்றப்பட்டுவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூல் அவரது இலக்கியப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் மற்றும் நல்ல தொடக்கமாகவும் அமைந்தது. இவ்விழாவின் கருத்துரைகள் அனைத்தும் மிகுந்த கருத்து சொறிவு மற்றும் சமூக நலன் காக்கும் வகையில் அமைந்திருந்தது.
இவ்விழாவின் இறுதியில் ஆசிரியர் கவிஞர் கவி செல்வா ஏற்புரை வழங்கி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது நன்றி பாராட்டி இனிதே நிறைவுற்றது. மேற்படி 500-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
— R Sawalay








Comments are closed, but trackbacks and pingbacks are open.