ஜாலியா படிக்கலாம் வாங்க – 01
இந்த எக்ஸாம் யாருங்க கண்டுபிடிச்சா? மவனே அவன் மட்டும் கையில் கிடைச்சான் செத்தான். முடியலங்க. மார்ச் மாசம் எக்ஸாம். என்ன பண்றது ஏது பண்றது ஒன்னும் புரியலையா? விளையாட்டு தனமா ஆறு மாசத்தை ஓட்டிட்டோம்னு கவலையா?
அட அதெல்லாம் விடுங்க. இப்ப இருக்கிற டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, இந்த மூணு மாசம் ஒவ்வொரு நாள் இப்பக்கூட படிச்சோம்னா … அதுவும் ஜாலியா படிச்சோம்னா … நல்ல மதிப்பெண் வாங்குவதற்கு வாய்ப்பு இருக்குங்க. ஒன்னே ஒன்னு இந்த மூணு மாசம் எந்த சுபகாரியமும், பெரிய காரியமா, கொண்டாட்டமா இல்லாதபடி பார்த்துக்கோங்க. காலையில் வழக்கமான நேரத்தைவிட கொஞ்சம் சீக்கிரமா எழுந்திடுங்க. காலை நேரத்தை படிக்கிறதுக்குனு மட்டும் வச்சிக்கோங்க. மாலையில் வீட்டுப்பாடங்களை முடிச்சிடுங்க. மீண்டும் மறக்காம தூங்க போறதுக்கு முன்ன கொஞ்ச நேரம் படிச்சிடுங்க. இப்பவே, கிறிஸ்துமஸ் வந்தாச்சு. அடுத்து வருச பிறப்பு வந்துடும். நடுவுல வெறும் ரெண்டே மாசம்தான். போறது தெரியாது. மலைபோல குவிஞ்சி கிடக்கேனு நினைக்காம, மனசளவுல ஜாலியா படிங்க போதும் … ஜெயிச்சிரலாம்!
— பேரா சா அருள்
Comments are closed, but trackbacks and pingbacks are open.