கொள்கை இல்லாமல் பாசிச பாஜகவை எதிர்க்க முடியாது!
மூர்க்கமாக முரட்டு வேகத்தில் மம்தா பானர்ஜி பாஜகவை சாடுகிறார் . ஆனால் மேற்கு வங்காளமோ, ஏன் திரிணாமூல் காங்கிரஸோ பாஜகவை சாடுவதில் அத்துணை தீவிரமாக இல்லை.
தீவிரமாக ராகுல்காந்தி பாஜகவை எதிர்க்கிறார். ஆனால் காங்கிரஸ்காரர்கள் பாஜவை எதிர்ப்பதில் தீவிரத்தன்மையோடு இல்லை.
இதையே தான் கெஜ்ரிவால் செய்தார். என்னவானார். பாஜகவோடு ஒற்றைக்கு ஒற்றை நின்றார். இன்றைக்கு அந்த கட்சி பலமாக இருந்த டெல்லி பாஜக கையில்.
காங்கிரசின் கோட்டைகளைத்தான் பாஜக செதில் செதிலாக பிரித்தது.
மம்தா பானர்ஜியும் கம்யூனிஸ்டுகளும் கட்டியாண்ட மேற்கு வங்காளத்தில் தான் பாஜக 40% வாக்குகளை பெற்று இருக்கிறது.
அதே மு க ஸ்டாலின் பாஜகவை எதிர்க்கிறார். மொத்த திமுகவும் பாஜகவை எதிர்க்கிறது , ஏன் மொத்த தமிழகமும் பாஜகவை ஆர் எஸ் எஸ் எஸை மு க ஸ்டாலினுக்கு என்ன தீவிரத்தன்மை உள்ளதோ அதற்கு நிகரான சொல்லப்போனால் அதனினம் கூடுதல் தீவிரத்தன்மையோடு திமுகவினரும் தமிழர்களும் பாஜகவை எதிர்க்கிறார்கள்.
ஒரு பாசிசக் கொள்கையை எதிர்த்து நிற்பதன் அவசியத்தை மக்களுக்கு கொண்டுசெல்லாவிடில் , மக்களுக்கு அதன் கொடும் விளைவுகள் புரியாது.
பாசிச பாஜகவை இன்னோர் அரசியல் கட்சி தானே என்பதோடு அணுகுவார்கள். பாஜவை எதிர்ப்பதை ஏதோ மம்தா பேனர்ஜிக்கும் ராகுல் காந்திக்கும் உள்ள தனிப்பட்ட பகை என்பதாகவே எண்ணிக்கொள்வார்கள். அது தான் நடக்கிறது வடக்கில்.
தமிழகத்தில் திராவிட இயக்கம் திமுக தலைவர் முக ஸ்டாலின் இவர்கள் செய்தது ஒன்று தான். மக்களை அரசியல்வயப்படுத்துவது. அரசியலில் எதிர் விளைவுகளை மக்களுக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பது.
அதாவது மக்களோடு இருப்பது. இதை என்றைக்கு மம்தா பேனர்ஜியும் ராகுல் காந்தியும் தேஜஸ்வியும் அகிலேஷும் முழுமையாகச் செய்கிறார்களோ அன்றைக்கு தான் பாசிச பாஜகவை அவர்களால் வெல்ல முடியும்.
கொள்கை இல்லாமல் பாசிசத்தை எதிர்க்க முடியாது.
மக்களோடு இல்லாமல் அதை எதிர்க்கவேண்டும் என்கிற எண்ணத்தை கூட மக்களுக்கு கொண்டுவர முடியாது.
— சாந்தி நாராயணன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.