அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆரிய பார்ப்பனியத்தை வீழ்த்துவோம்! – தமிழ்நாடு அர்ச்சகர் சங்கத் தலைவா் ஆவேசம் !

திருச்சியில் அடகு நகையை விற்க

பாரதிய பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத தமிழ் பொக்கிஷமான திருக்குறள்,  ஆழமான ஞானம், பல நூற்றாண்டுகளாக பாரதத்தின் தார்மீக மற்றும் ஆன்மிக உணர்வுகளை வடிவமைத்துள்ளது.

சனாதன தர்மத்தின் நித்திய நெறிமுறைகளில் திடமாக வேரூன்றி, காலம், சமூகம் மற்றும் சூழ்நிலைகளைக் கடந்து நிற்கிறது.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

திருவள்ளுவரின் குறள்கள், இறைவனிடம் பக்தி செலுத்துவதை உறுதிப்படுத்தி, நீதிசார் நடத்தையை மனித வாழ்வின் மிக உயரிய வழிகாட்டும் கொள்கையாக நிலைநிறுத்துகின்றன. இன்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஆளுநர் – ஆர் என் ரவி

திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி  சனாதன தர்ம அடிப்படையில் உள்ள முத்திரையை வைத்து திருவள்ளுவரை அவமானப்படுத்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்  உள்துறை அமைச்சர் அமித்சா.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

சமத்துவ சமர் – தமிழ் சமூகத்தின் முதுபெரும் அடையாளம் அய்யா திருவள்ளுவர்  மீது காவி ஸ்டிக்கர் ஒட்டும், சனாதன கூண்டில் அடைக்கும்  ஆளுநர் இரவி – உள்துறை அமைச்சர் அமித் சாவை தமிழ்  ஆன்மீக  உலகம் &  அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு சார்பாக கண்டிக்கிறோம்!

சமத்துவ மண்ணான தமிழ்நாட்டின் சமத்துவ சமயக் கோட்பாடுகளைத் தொடர்ந்து திருடி ஸ்டிக்கர் ஒட்ட, சனாதன மனுதர்ம அடிப்படையில் அடைத்து வருகிறது பார்ப்பனியம். அய்யா வைகுண்டர், வள்ளலார் தொடங்கி இன்று திருவள்ளுவர் வரையில் திருட்டு தொடர்கிறது.

ஆர் எஸ் எஸ், ஆளுநர் ரவி, அண்ணாமலை, நைனார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, டாக்டர் எஸ் ஜி சூர்யா இணைந்து நடத்தும் இக்கூத்தினை அறிவார்ந்த சமத்துவ நெறி கொண்ட தமிழகத்தின் ஆன்மிக மரபு, தமிழ் தமிழகத்தின் சமத்துவ மரபு நிராகரிக்கிறது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்  வன்மையாக கண்டிக்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

பொருள்

பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.

தமிழ்நாட்டின் கோயில்களை பார்ப்பனீயப் பிடியிலிருந்து மீட்கப் போராடிவரும் மாபெரும்  திராவிட இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் ஆர் எஸ் எஸ் கூட்டம் அதன் ஒரு பகுதியாக சமத்துவ தமிழ் மரபுகளை கையகப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது.  மதுரை திருப்பரங்குன்றம் விச யத்தில் மத மோதலையும் ஏற்படுத்த முயற்சிக்கும் இவர்கள்தான் திருவள்ளுவர் கொள்கையை பின்பற்றுபவர்களா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்திற்காக பயிற்சி முடித்த மாணவர்கள் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடுத்தெருவில் 20 ஆண்டுகளாக காத்திருக்கிறோம். ஏன் இதற்காக எந்தக் குரலும்    சங்பரிவார அமைப்பினர்  கொடுக்கவில்லை? இதற்கான எந்த போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லையே ஏன்?  இதைப்பற்றி ஆளுநர் அவர்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் என்றாவது பேசியிருக்கிறார்களா? எல்லா இந்துக்களும் சமம் என்பதை ஏற்பார்களா?

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறையை அகற்றி கோயில்களை அரசு, மக்கள் கண்காணிப்பிலிருந்து விலக்கி, ஆர் எஸ் எஸ் – சங்பரிவார்  பிடியில் சிக்க வைக்கும் சதிதானே இது?

Rajasthan polls: Amit Shah leads, attends over 62 public programmes - The Economic Timesசிதம்பரத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு பூணூல் போடுவது, வள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, வள்ளலாரை சனாதன சிமிழுக்குள் அடைப்பது வைகுண்டரை பார்ப்பனிய மயமாக்குவது என்ற ஆன்மீக சித்து வேலைகளை பார்ப்பனிய புரட்டல்களை  தமிழ்நாட்டின் சமத்துவ ஆன்மீகம் உறுதியாக நிராகரிக்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மாபெரும் சமத்துவ மரபு கொண்ட தமிழ் ஆன்மீக சமூகம் ஆர்எஸ்எஸ் பாஜக ஆளுநர் ரவி, உள்துறை அமைச்சர் அமித்சாவின்  ஸ்டிக்கர் ஓட்டும் அரசியலை மோசடியான ஆன்மிகத்தை கடுமையாக எதிர்க்கிறது வன்மையாகக் கண்டிக்கிறது.

பட்டியல் சமூகத்தினருக்கு பூணூல் போட்டு பார்ப்பனிய சிமிலுக்குள் அடைக்கும் ஆர்.என். ரவி சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாட பட்டியல் சமூகத்தை அனுமதிப்பாரா?

தீட்சதர்களிடம் பேசுவாரா?

தமிழகம் முழுக்க உள்ள சைவ வைணவ கோயில்களில் பிறப்பால் பார்ப்பனர் தவிர மற்ற கவுண்டர் தேவர் நாடார் வன்னியர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட இந்து தமிழ் சாதியினரை அர்ச்சகராக்க கோரிக்கை வைப்பாரா?

உண்மையில் இந்துக்களுக்கான கட்சி பாஜக எனில் அனைத்து சாதி இந்துக்களும் அர்ச்சகராக பாஜக குரல் கொடுக்காதது ஏன்?

தனது பார்ப்பனிய, சனாதன வைதீக ஆன்மீகத்தில் நம்பிக்கை அற்று, மாபெரும் தமிழ் சமய மரபை களவாடும் இக்கூட்டத்தை  தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

வா.ரங்கநாதன்,
வா.ரங்கநாதன்,

தமிழ் மரபை களவாடும் இந்த இழி செயலை  தமிழக சமத்துவ ஆன்மீக சமூகம் வன்மையாக கண்டிப்பதோடு அனைத்து தமிழ் மக்களும் பக்தர்களும் இதற்கு எதிராக தங்கள் கண்டனத்தை பதிவு  செய்வதோடு, தமிழக கோயில்களில் முன்பு ஆளுநரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களையும் பிஜேபி தலைவர்களை கண்டித்து  போராட்டம் நடத்த வேண்டும் என்று அர்ச்சக மாணவர் சங்கம் கோருகிறது.

பாஜகவை மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் ஆளுநர் ஆர்.என். ரவியையும் வீட்டுக்கு அனுப்ப  தமிழ் ஆன்மீக உலகம் கோயில், கோயிலாகச் சென்று தனது பணியைச் செய்யும். தனது மரபை, ஆன்மீகத்தை பேணிப் பாதுகாக்கத் தவறிய எந்த ஒரு இனமும் வரலாற்றில் நீடிக்காது. நமது தனித்த  சமத்துவ ஆன்மீக மரபை பாதுகாப்போம் ஆர்எஸ்எஸ் ஆளுநர் ரவி கூட்டத்தை நிராகரிப்போம்!

ஆரிய பார்ப்பனியத்தை வீழ்த்துவோம்!

கோயில்களில் சமத்துவத்தை நிலைநாட்டப் போராடுவோம்.

திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய ஆரிய சனாதனத்தை நிராகரிப்போம் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு , தலைவர் வா.ரங்கநாதன் தொிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.