புனித ஜோசப் கல்லூரியில் இணையவழி தேசிய அளவிலான மெய்நிகர் மாநாடு !
திருச்சிராப்பள்ளி புனித ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி வணிகவியல் துறை (பணிமுறை II) சார்பில் “நிலைத்த வளர்ச்சி டிஜிட்டல் மாற்றம் மற்றும் வணிகம் மற்றும் மேலாண்மையில் உருவாகும் புதிய போக்குகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய அளவிலான மெய்நிகர் மாநாடு இணையவழியில் நடைபெற்றது.
தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் அருள்முனைவர் எஸ். மரியதாஸ் சே ச தனது தலைமை உரையில் தற்போதைய உலகச் சூழலில் நிலைத்த வளர்ச்சியின் அவசியத்தை கூறி பொருளாதார வளர்ச்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பும் சமூகப் பொறுப்பும் இணைந்திருக்க வேண்டும் மேலும் நிலைத்த வளர்ச்சி எதிர்கால தலைமுறைகளுக்கான கட்டாயத் தேவையாகும் என வலியுறுத்தி மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகள் எளிய வாழ்க்கை பொறுப்புள்ள நுகர்வு ஒழுக்கமான வணிக நடைமுறைகள் இயற்கையுடன் ஒற்றுமை இன்றைய சுற்றுச்சூழலில் சமூகத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் மிகுந்த பொருத்தம் கொண்டவையாக உள்ளன எனவும் கல்வி நிறுவனங்கள் சமூகப் பொறுப்புள்ள வணிகத் தலைவர்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று கூறினார்.
சென்னை எஸ்.ஆர்.எம். ராமபுரம் வளாகத்தின் மேலாண்மைத் துறை பீடாதிபதி முனைவர் பிரவீன் குமார் தனது தொடக்க உரையையில் நவீன வணிகத் தந்திரங்களில் நிலைத்த வளர்ச்சியும் டிஜிட்டல் மாற்றமும் இணைந்திருக்கும் அவசியத்தை விளக்கினார். இந்நிகழ்வில் மாநாட்டு ஆய்வு நூல் (Conference Proceedings) கல்லூரி முதல்வரால் வெளியிடப்பட்டது.
தொடக்க அமர்வில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜே வினோத் குமார் மாநாட்டின் இயங்குதள (Dynamics of the Conference) விவரங்களையும் மாநாட்டின் நோக்கங்கள் தலைப்புச் சாராம்சம் மற்றும் நிகழ்ச்சி அமைப்பு குறித்தும் வணிகம் மற்றும் மேலாண்மை துறைகளில் நிலைத்த வளர்ச்சி டிஜிட்டல் மாற்றம் மற்றும் புதிய போக்குகள் குறித்து கல்வியாளர்கள் ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் இடையே ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதே மாநாட்டின் முக்கிய நோக்கம் என கூறினார்.
இறைவணக்கத்துடன் தொடங்கியது இம்மாநாட்டு தொடக்க விழாவில் வணிகவியல் துறை (பணிமுறை II) ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி ஆகஸ்டின் ஆரோக்கியராஜ் இன்றைய உலக பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சூழலில் மாநாட்டின் தலைப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளதாக என்று கூறி வந்தவர்களை வரவேற்றார் முடிவில் அமைப்புச் செயலாளர் முனைவர் ஜே. பெர்க்மான்ஸ் நன்றி கூறினார்.
இணைமுதல்வர் முனைவர் டி குமார் துணை முதல்வர் திரு டி ஆண்டனி திவாகர் சந்திரன் வணிகவியல் புலத்தலைவர் முனைவர் ஜூலியஸ் சீசர் உட்பட புது டெல்லி குஜராத் பஞ்சாப் தெலுங்கானா கர்நாடாக கேரளா தமிழ்நாடு மற்றும் புதுசேரி ஆகிய மாநிலங்களிலிருந்து 75 பேராசிரியர்கள் 60 முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணாக்கர்கள் 150 இளங்கலை மற்றும் முதுகலை மாணாவர்கள் கலந்து கொண்டார்கள்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.