எல்லா வியாதிக்கும் நல்ல மருந்து ! வாழ்க்கை வாழ்வதற்கே – பாகம் 11

1963 வரை இந்திய தேசத்தில் நீரிழிவு என்கிற நோயை கிடையாது. அப்படியே இருந்தாலும் அது பணக்கார வியாதி. இன்றைக்கு வீட்டில் இரண்டு அல்லது மூவர் இருந்தால் அதில் ஒருவருக்கு ஒரு சக்கரை வியாதி. மற்றொருவருக்கு தைராய்டு. மூன்றாவது நபருக்கு மூட்டு வலி என்றாகிவிட்டது.  இன்று, வியாதி இல்லாம யாரும் இல்லை. சர்க்கரை வியாதியும் இரத்த அழுத்தமும் இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை கொண்டு அதை கட்டுக்குள் கொண்டுவரலாம் என்றால் நம்ப முடிகிறதா?

ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். கருஞ்சீரக பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். கூடவே,  செரிமான கோளாறும் வயிற்றுப் பிரச்சனையும் குணம் ஆகும். ராஜ உள் உறுப்புகள் என்று சொல்லக்கூடிய கல்லீரல் ஆரோக்கியத்துடன் மேம்படும். தினமும் கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வாங்க.  மரணத்தைத் தவிர எல்லா வியாதிக்கும் நல்ல மருந்து.

—  பேரா சா.அருள்

Comments are closed, but trackbacks and pingbacks are open.