அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கொலை வழக்கின் அச்சாணியான இவர்கள் எப்படி தப்பித்தார்கள்?

சாத்தான்குளம் கொட்டடிக்கொலை வழக்கு – பாகம் 06

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

சாத்தான்குளம் இரட்டை கொட்டடிக் கொலை வழக்கு குறித்து பல்வேறு கோணங்களில் வெளியான செய்திகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். பத்துரூபாய் இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் டாக்டர் நல்வினை விஸ்வராஜூ பதிவிட்ட தகவல்களை கடந்த 5 தொடர்களில் பார்த்தோம். இந்த பதிவில், சாத்தான்குளத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் அருள்குமார் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து தப்பித்த சிலர் குறித்து குறிப்பிடுகிறார்.
அவரது பதிவில், “சாத்தான்குளம் ஒன்பது காவல்துறையினர்க்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி நிச்சயம் நமது பாராட்டுக்குரியவர். எனினும் அவர் பரிசீலிக்கத் தவறிய இரண்டு மிக முக்கியமான நபர்களை பற்றி நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இவர்களுக்கும் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.இல்லை என்றால் இத் தீர்ப்பு முழுமை அடையாது. இவர்களுடைய செயல்பாடுகளை பார்த்தால் நிச்சயமாக இவர்கள் கொலைக்கு உடந்தையான வர்களாகவே காணப்படுகிறார்கள்.
இவர்களுடைய பொறுப்பற்ற செயல்பாடுகளே இந்த கொலையில் காவல்துறையினருக்கு முக்கிய உதவிபுரிந்திருக்கின்றன என்பேன்.

2026 June 11 - 17 Angusam Book

அருள்குமார்
அருள்குமார்

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

பினிக்ஸ்- ஜெயராஜ் அவர்களை காவல்துறை கொடுங்கோலர்கள் அடித்து காயப்படுத்தி ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அந்த காயங்களுக்கு எந்த விதமான முதலுதவி சிகிச்சையோ அவசர உதவி ட்ரீட்மெண்ட்டோ தரப்படாமல்,அவர்கள் மூச்சுவிட சிரமமாக இருக்கிறது என்று சொல்லியும், “அவர்கள் உடலில் எந்த காயங்களும் இல்லை,They are fit to be remanded” என்று பரிந்துரை கடிதம் அளித்த அரசு மருத்துவமனை டாக்டர் #வினிலாவை இக் கொலை வழக்கில் கூட்டுப் பொறுப்பாளியாக கொலைச் சதிக்கு உடந்தையானவராக ஏன் சேர்க்கப்படவில்லை?
அடுத்து, JudicialMagistrate சரவணன். அதேபோல கோவில்பட்டி நீதிமன்ற நீதியரசர் அவர்களிடம் அழைத்து வரப்பட்ட போது அவர் தூரத்திலிருந்து பார்த்துவிட்டு அவர்களுடைய உடம்பில் எந்த ஒரு காயமும் இல்லை, எந்தப் புகாரும் (complaint) பாதிக்கப்பட்டவர்கள் சொல்லவில்லை.
எனவே, அவர்களை 15 நாள் ரிமாண்ட் பண்ணலாம் என்று ஒப்புதல் வழங்கி பொறுப்பற்ற வகையில் நடந்து தனது கடமையை செய்யத்தவறிய (அ)நீதி அரசர் சரவணனை ஏன் கொலைவழக்கில் உடந்தையானவராக சேர்க்கப்படவில்லை?
இவர்கள்தான் முழு கொலைவழக்கிலும் அச்சாணியாக இருந்திருக்கிறார்கள். ஆகவே கீழமை நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உயர் நீதிமன்ற மேல்முறையீடு வருகிறபோது இவர்களையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும். அதேபோல் சாத்தான்குளம் காவல் நிலையம் அருகே இருப்பினும் இந்நிகழ்வுகளை கண்டும் காணாதுமிருந்த DSP, அவர்களது நிலைமையை விசாரிக்காது தூரத்திலிருக்கும் கோவில் பட்டி சிறைக்கு அனுப்பிவைத்த சிறை கண்காணிப்பாளர், மாவட்ட SP ஆகியோரும் குற்றவாளிகளே!” என்பதாக சுட்டிக்காட்டுகிறார், அருள்குமார்.
கோணங்கள் தொடரும் …
அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.